Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆரம்பமானது ஐபிஎல் சீசன்-2 அதிரடி!

கேப்டவுன்: ஐபிஎல் 2வது சீசனின் போட்டிகள் தொடங்கின. பிற்பகல் தொடங்கிய முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.டோணி, பவுலிங்கைத் தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தொடங்கியுள்ளது.

கேப்டவுனில் உள்ள நியூலான்ட்ஸ் ஸ்டேடியத்தில் இப்போட்டி நடைபெறுகிறது.

இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் 2வது போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் ...

உலகின் தலை சிறந்த கேப்டன்களில் ஒருவரான டோணியின் தலைமையில் 2வது சீசனை வெற்றிகரமாக தொடங்க சென்னை சூப்பர் கிங்ஸ் ஆயத்தமாக உள்ளது.

கடந்த சீசனில் இது 2வது இடத்தைப் பிடித்த அணி என்பது குறிப்பிடத்தக்கது.

2008ம் ஆண்டில் விட்ட கோப்பையை இந்த முறை பறித்து விட வேண்டும் என சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் வேகமாக உள்ளனர்.

முக்கிய வீரர்கள் ...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், பல முக்கிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். மாத்யூ ஹெய்டன், அல்பி மார்கல், சுரேஷ் ரெய்னா, எல்.பாலாஜி ஆகியோர் அணிக்கு வலு சேர்ப்பார்கள். அதேபோல, கேப்டன் டோணியின் தலைமை கூடுதல் பலமாகும். வேகப் பந்து வீச்சாளர் கோணியும் அணியில் இருக்கிறார். கடந்த ஆண்டு சிறப்பாக பந்து வீசியவர் கோணி.

புதுமுகங்கள் ..

ஆன்ட்ரூ பிளின்டாப், ஜார்ஜ் பெய்லி, திலன் துஷாரா ஆகியோர் இந்த ஆண்டு முதல் முறையாக சென்னை அணிக்கு விளையாடவுள்ளனர்.

இழப்புகள் ...

மைக் ஹூசே, ஜேக்கப் ஓரம் ஆகியோர் அணியில் இல்லாதது சென்னை அணிக்கு நிச்சயம் பலவீனமானதாகும். அதேபோல சுரேஷ் ரெய்னா, பார்த்திவ் படேல், வித்யூத் சிவராமகிருஷ்ணன், பத்ரிநாத் ஆகியோருக்கு தென் ஆப்பிரிக்காவில் ஆடிய அனுபவம் இல்லை. இதுவும் பலவீனமானதாகவே இருக்கும்.

மும்பை இந்தியன்ஸ்..

கடந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அணி. காரணம், சச்சின், ஜெயசூர்யா ஆகியோர் இருந்ததால். ஆனால் பெரும் ஏமாற்றத்தையே அளித்தது மும்பை இந்தியன்ஸ். ஆரம்பத்திலிருந்தே தோல்வியைத் தழுவி வந்த இந்த அணி கடைசி ஆட்டங்களில் மட்டும் சற்று சிற்பபாக ஆடியது.

ஆனால் தற்போது சச்சின் நல்ல பார்மில் இருப்பதால், மும்பை அணி பெரும் நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் உள்ளது.

முக்கிய வீரர்கள் ..

சச்சின் டெண்டுல்கர், ஜெயசூர்யா, ஹர்பஜன் சிங், பிரேவோ ஆகியோர் அணிக்கு பலமாக இருப்பார்கள். அனுபவம் வாய்ந்த ஜாகிர்கான், ராபின் உத்தப்பா ஆகியோரும் அணியில் உள்ளனர்.

புதுமுகங்கள் ..

ஜீன் பால் டுமினி, ஷிகார் தவான், கிரஹாம் நேப்பியர் ஆகியோர் புதுமுகங்களாக உள்ளனர்.

பலவீனங்கள் ..

பிரேவோ முழுத் தொடரிலும் ஆட மாட்டார். இது மும்பை அணிக்கு இழப்பாக அமையும். அதேபோல தவால் குல்கர்னி, அபிஷேக் நாயர் ஆகியோர் மட்டுமே உள்ளூர் வீரர்கள்.

ராஜஸ்தான் ராயல்ஸ் ..

கடந்த முறை கோப்பையை வென்ற சாம்பியன் அணி, ஷான் வார்னேவின் ராஜஸ்தான் ராயல்ஸ். இந்த முறையும் கோப்பையைத் தக்க வைத்துக் கொள்ள அது கடுமையாக போராடும் என்பதில் சந்தேகம் இல்லை.

அதேசமயம், பெங்களூர் அணி கடந்த முறை பெரும் சொதப்பு சொதப்பிய அணிகளில் ஒன்று. ஆனால் இந்த முறை நிச்சயம் முத்திரையைப் பதிக்க முயற்சிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஆவலோடு எதிர்பார்த்துள்ள ஐபிஎல் கிரிக்கெட் விருந்தில் இன்று இந்த இரண்டு போட்டிகளும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

2 மணிக்குத் தொடங்கும் போட்டியையும், இரவு 8 மணிக்குத் தொடங்கும் 2வது போட்டியையும் செட் மேக்ஸ் டிவியில் நேரடியாக காணலாம்.

களை கட்டும் பெட்டிங் ..

இதற்கிடையே, கோப்பையை வெல்லப் போவது யார் என்ற சூதாட்டத்தில் புக்கிகள் பிசியாக இறங்கியுள்ளனர்.

இந்த பெட்டிங்கில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் கோப்பையை வெல்லும் என அதிகம் பேர் பெட் கட்டியுள்ளனராம்.

அதேபோல, ஒரே ஓவரில் யுவராஜ்சிங 6 சிக்சர் அடிப்பார், பாலாஜி மீண்டும் ஹாட்ரிக் சாதனை படைப்பார், கங்குலி 3 முறைக்கு மேல் ரன்அவுட் ஆவார், காம்பீர் அதிக ரன் குவிப்பார் என்றும் பெட் கட்டி வருகின்றனராம்.

சென்னை அணிதான் கோப்பையை வெல்லும் என அதிகம் பேரும், டெல்லிக்குத்தான் கோப்பை என 2வது இடமும் கிடைத்துள்ளது.

Story first published: Wednesday, December 7, 2011, 18:25 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+