Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அயர்லாந்தை வீழ்த்தியது இந்தியா-சூப்பர்-8 இன்று துவக்கம்

India-Ireland Supporters
நாட்டிங்ஹாம்: டுவென்டி-20 உலக கோப்பை தொடரில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் சூப்பர்-8 சுற்று போட்டிகள் இன்று துவங்குகிறது.

டுவென்டி-20 உலக கோப்பை தொடர் லண்டனில் நடக்கிறது. நேற்று நடந்த இரண்டாவது லீக் போட்டியில் இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதின. மழை காரணமாக போட்டி 18 ஓவர்களாக குறைக்கப்பட்டன. டாஸ் வென்ற டோணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.

ஜாகிர் கான் பந்துவீச்சில் மிரட்ட அயர்லாந்து அணி, திக்குமுக்காடி போனது. துவக்க வீரர்கள் போர்டர்பீல்டு (5), ஜெரிமி பே (0) ஜாகிர் பந்தில் அவுட்டானார்கள்.

ஆன்ட்ரு ஒயிட் 29, மூனே 19, வில்சன் 19 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு அவுட்டாக அயர்லாந்து 18 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடு்த்தது. சூப்பராக பந்துவீசிய ஜாகிர் கான் 4 விக்கெட் வீழ்த்தினார்.

அடுத்து பேட் செய்த இந்திய அணிக்கு கம்பீர், ரோஹித் நல்ல துவக்கம் தந்தனர். கம்பீர் 37 ரன்களுக்கு அவுட்டானார். அடுத்து வந்த டோணி 14 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.

சிறப்பாக விளையாடி ரோஹித் சர்மா அரைசதம் கடந்தார். இந்தியா 15.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ரோஹித் 52, யுவராஜ் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மற்றொரு போட்டியில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த இலங்கை 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

சூப்பர்-8 இன்று துவக்கம்...

லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்று முதல் சூப்பர்-8 சுற்று போட்டிகள் துவங்குகின்றன. இதில் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் ஒரு பிரிவிலும், பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து, அயர்லாந்து ஒரு பிரிவிலும் விளையாடுகின்றன.

இந்திய அணி நாளை 12ம் தேதி வெஸ்ட் இண்டீசுடனும், 14ம் தேதி இங்கிலாந்துடனும், 16ம் தேதி தென் ஆப்ரிக்காவுடனும் மோதுகிறது.

இன்று நடக்கும் சூப்பர்-8 போட்டியில் நியூசிலாந்து அணி, அயர்லாந்தையும், தென் ஆப்ரிக்க அணி, இங்கிலாந்தையும் எதிர் கொள்கின்றன.
Story first published: Wednesday, December 7, 2011, 18:27 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+