Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் பேட்டி: இந்தியா-மே.இ. தீவுகள் இன்று மோதல்

கிங்ஸ்டன்: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் நான்கு போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இன்று கிங்ஸ்டனில் துவங்குகிறது.

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு சுமார் 8.00 மணிக்கு நடக்கிறது.

உலக கோப்பை தொடரில் சூப்பர்-8 சுற்றோடு வெளியேறிய இந்திய, இந்த தொடரில் அனுபவ சச்சின், அதிரடி ஷேவாக், இளம் ரெய்னா மற்றும் புயல்வேக ஜாகிர் ஆகியோர் இல்லாமல் களமிறங்குகிறது. என்றாலும் கம்பீர், யுவராஜ், கேப்டன் டோணி, யூசுப் பதான் ஆகியோர் இருப்பது அணிக்கு நம்பிக்கை அளிக்கிறது.

பந்துவீச்சு இஷாந்த் சர்மா, ஆர்பி சிங், பிரவீண் குமார், ஆசிஷ் நெஹ்ரா, ஹர்பஜன், ஓஜா என பலமாக இருக்கிறது.

ரசிகர்களுக்கு உற்சாகம் தருவோம்...

இந்நிலையில் இத்தொடரில் சிறப்பாக விளையாடி உலக கோப்பை தொடரில் ஏற்பட்ட தோல்வியால் ஏற்பட்ட காயத்துக்கு மருந்திடுவோம் என கேப்டன் டோணி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்திய அணியின் வெற்றி நடை மீண்டும் தொடரும். சிறப்பாக விளையாடி இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிப்போம்.

தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி நன்றாக விளையாடி வருகிறது. டுவென்டி-20 உலக் கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முன்னேறி சூப்பர் பார்மில் இருக்கிறது. இத்தெடாரில் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணிக்கு தான் வெற்றி கிடைக்கும். உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம் என்றார் டோணி.

யுவராஜ், டோணி சிக்கலானவர்கள்...

இன்றைய போட்டி குறித்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கெய்ல் கூறுகையில்,

ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணியை வெல்வது கடினம். டுவென்டி-20 தொடரில் எங்களிடம் தோற்றதற்கு பதிலடி கொடுக்க தயாராக இருப்பார்கள்.

சச்சின், ஷேவாக் போன்ற உலகம் தர வாய்ந்த வீரர்கள் இடம்பெறவில்லை. ஆனாலும், யுவராஜி, டோணி, ஹர்பஜன், இஷாந்த் போன்றவர்கள் எங்களுக்கு தொல்லை கொடுக்க கூடியவர்கள். இத்தொடரில் சிறப்பாக விளையாடுவோம் என்றார் கெய்ல்.

Story first published: Wednesday, December 7, 2011, 18:27 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+