Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

16 வீரர் பட்டியல் அறிவிப்பு-சச்சின், ஜகீர் கான் இல்லை

Ashish Nehra
டெல்லி: மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப் பயணத்துக்கான 16 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் சச்சின் தெண்டுல்கர், ஜகீர் கான் ஆகியோர் சேர்க்கப்படவில்லை. அதே போல ஷேவாக், சுரேஷ் ரெய்னா, இர்பான் பதான் ஆகியோரும் இடம் பெறவில்லை.

ஆஷிஷ் நெஹ்ரா, அபிஷேக் நாயர் ஆகியோர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்:

தோணி, ஓஜா, ஆர்.பி.சிங், யுவராஜ் சிங், பிரவீன் குமார், இஷாந்த் சர்மா, ஜடேஜா, தினேஷ் கார்த்திக், கம்பீர், முரளி விஜய், பத்ரிநாத், யூசுப் பதான், ஹர்பஜன் சிங், நெஹ்ரா, அபிஷேக் நாயர், ரோகித் சர்மா ஆகியோர் ஆவர்.

கிறிஸ்டன் பேச்சு-கிரிக்கெட் வாரியம் மறுப்பு:

இதற்கிடையே, ஐபிஎல் போட்டிகளில் விளையாடியதால் பல வீரர்கள் சோர்வடைந்து விட்டனர். இதுவே உலகக் கோப்பைப் போட்டியில் தோற்க காரணமாகி விட்டது என்று கூறியுள்ள அணியின் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் பேச்சை கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது.

இதுகுறித்து கிரிக்கெட் வாரிய நிதிக் கமிட்டி தலைவரும், மீடியா தலைவருமான ராஜீவ் சுக்லா கூறுகையில், சோர்வடைந்ததாக கருதிய வீரர்கள் போட்டியிலிருந்து விலக வாய்ப்பு இருந்தது.

எந்த வீரராவது சோர்வாகவோ அல்லது களைப்பாகவோ உணர்ந்தால் அவர்கள் தாராளமாக வாரியத்திடம் தெரிவித்து விட்டு ஓய்வெடுக்கலாம். அதை நாங்கள் முன்பே தெளிவாக தெரிவித்து விட்டோம்.

ஓய்வுக்குப் பின்னர் அந்த வீரர் விளையாடும் தகுதியில் இருந்தால் அவரை மீண்டும் தேர்வுக்குப் பரிசீலிப்பதே வாரியத்தின் வழக்கம்.

எந்த வீரரையும், நாங்கள் இந்தத் தொடரில் அல்லது அந்தத் தொடரில் கண்டிப்பாக விளையாடுங்கள் என வாரியம் நிர்ப்பந்திப்பதில்லை.

ஐபிஎல் போட்டியால்தான் இந்தியா தோற்றதாக கூற முடியாது. இப்படிப்பட்ட கருத்துக்கள் எல்லாம் அணியை மேம்படுத்துவதற்காக கூறப்படும் ஆலோசனைகளாக கருதிக் கொள்ள வேண்டும் என்றார் சுக்லா.
Story first published: Wednesday, December 7, 2011, 18:27 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+