இந்தியாவுக்கு வெளியே ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் - பிசிசிஐ

மாநில அரசுகளும், மத்திய அரசும் பாதுகாப்பு வழங்க மறுத்ததால்தான் இந்த முடிவை எடுக்க நேரிட்டது. இதனால் இந்திய ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைவார்கள். அதற்காக அவர்களிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என கிரிக்கெட் வாரியத் தலைவர் சசாங்க் மனோகர் கூறியுள்ளார்.
இன்று காலை மும்பையில் நடந்த கிரிக்கெட் வாரிய அவசர செயற்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதுகுறித்து பின்னர் மனோகர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் போக்கு காரணமாக எங்களால் போட்டியை இந்தியாவில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. எனவேதான் நாட்டை விட்டு வெளியே கொண்டு செல்லும் முடிவை எடுத்துள்ளோம்.
போட்டிகள் எங்கு நடைபெறும் என்பது குறித்து இன்னும் 2 அல்லது 3 நாட்களில் முடிவு செய்வோம். மற்றபடி போட்டி நடைபெறும் தேதிகள், கால அளவு ஆகியவை அப்படியேதான் உள்ளன என்றார்.
இங்கிலாந்து அல்லது தென் ஆப்பிரிக்காவில் ஐபிஎல் 2வது சீசன் போட்டிகள் நடைபெறலாம் எனத் தெரிகிறது. இந்திய நேரப்படி மாலை 4 மணி மற்றும் இரவு 8 மணிக்கு போட்டிகளைக் காணும் வகையிலான நேரத்தில் போட்டிகள் நடத்தப்படும்.
தென் ஆப்பிரிக்காவில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டால், வான்டரர்ஸ், செஞ்சூரியன், போட்செப்ஸ்ட்ரூம் ஆகிய இடங்களில் போட்டிகள் நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.
ஆனால் இதுவரை ஐபிஎல் போட்டிகள் தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் தங்களைத் தொடர்பு கொள்ளவில்லை என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:24 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications