Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சீனிவாசனிடமிருந்து கோப்பையை வாங்க தயங்கினாரா சச்சின்?

கொல்கத்தா: இந்தியகிரிக்கெட் வாரியத்தலைவர் சீனிவாசனிடமிருந்து ஐபிஎல் கோப்பையை வாங்க மும்பை இந்தியன்ஸ் அணியைச் சேர்ந்த சச்சின் டெண்டுல்கர் தயங்கியதாக தகவல்கள் கூறுகின்றன.

வெற்றி பெற்ற மும்பை அணிக்கு சீனிவாசன் கோப்பையைக் கொடுத்தபோது சச்சின் அருகில் நிற்கவில்லை. மாறாக சற்று தள்ளிப் போய் நின்றிருந்தார். இதனால் அவர் சீனிவாசனிடமிருந்து கோப்பையைப் பெறத் தயங்கியதாக பேச்சுக்கள் கிளம்பியுள்ளன.

Mumbai Indians players jubilate with the trophy after winning the IPL 6 final match against Chennai Super Kings

சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் ஸ்பாட் பிக்ஸிங் புகாரின் பேரில் கைதாகியுள்ளார். இதனால் சீனிவாசனுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. இந்தநிலையில் சீனி கையால் கோப்பையைப் பெற சச்சின் தயங்கியிருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

சீனிவாசன் கோப்பையைக் கொடுத்தபோது அதை கேப்டன் ரோஹித் சர்மா வாங்கினார். அவருக்கு அருகில் ரிக்கி பான்டிங் இருந்தார். சற்று தள்ளித்தான் சச்சின் இருந்தார். சீனிவாசன் கோப்பையைக் கொடுத்தபோது ஹர்பஜன் சிங் கூட சச்சினை பிடித்து இந்தப் பக்கம் வருமாறு இழுத்தார். ஆனால் சச்சின் வர தயங்கியது வீடியோவில் நன்றாக தெரிகிறது. ஆனால் அதற்குள் கோப்பையை ரோஹித் சர்மா வாங்கியிருந்தார்.

கோப்பையை கொடுத்த பின்னர் சீனிவாசன் அமைதியாக மேடையை விட்டு இறங்கிப் போனார்.

Mumbai Indians players jubilate with the trophy after winning the IPL 6 final match against Chennai Super Kings

சச்சின் வேண்டும் என்றே சீனிவாசனைத் தவிர்த்தாரா அல்லது தற்செயலாக அது நடந்ததா என்பது தெரியவில்லை.

Story first published: Monday, May 27, 2013, 18:20 [IST]
Other articles published on May 27, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+