For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டிகளில் சாதனை படைத்த சச்சின் டெண்டுல்கர்

By Mathi
Sachin
மும்பை: ரஞ்சி கோப்பை போட்டிகளில் ஆறாவது முறையாக இறுதிப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்க இருக்கிறார். இந்தப் போட்டி வரும் 26-ந் தேதி மும்பையில் நடைபெற உள்ளது.

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டிகள் 5-ல் இதுவரை சச்சின் டெண்டுல்கர் விளையாடி இருக்கிறார். இதில் 4 போட்டிகளில் அவர் பங்கேற்றிருந்த மும்பை அணி வென்றிருக்கிறது. ஒரு போட்டியில்தான் தோல்வியை சந்தித்திருக்கிறது.

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டிகளைப் பொறுத்தவரையில் மொத்தம் 755 ரன்களை டெண்டுல்கர் குவித்திருக்கிறார். இதில் 4 செஞ்சுரிகளும் 2 அரை சதமும் அடங்கும்.

கடந்த ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியை டெண்டுல்கர் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. முதல் இன்னிங்சில் டக் அவுட் ஆனார்.. 2-வது இன்னிங்சில் 4 ரன்கள்தான் எடுத்திருந்தார். ஆனால் அந்தப் போட்டியில் மும்பை அணி வென்றது.

சச்சின் டெண்டுல்கரும் ரஞ்சிக் கோப்பை இறுதிப் போட்டிகளும் ஒரு பார்வை

19991-ம் ஆண்டு மே 3-7 ந் தேதி வரை ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. ஹரியானாவுக்கு எதிரான போட்டியில் சச்சின் 47 மற்றும் 96 ரன்களைக் குவித்திருந்தார். இந்தப் போட்டியில் மும்பை அணி 2 ரன்களில் தோல்வியைத் தழுவியது.

1995-ம் ஆண்டு மார்ச் 27-31-ந் தேதி வரை ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சச்சின் 140 மற்றும் 139 ரன்களைக் குவித்திருந்தார். இதிலும் மும்பை அணியும் வென்றது.

2000-ம் ஆண்டு ஏப்ரல் 19-23-ந் தேதி வரை மும்பை வான்கடே மைதானத்தில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 53,128 ரன்களை எடுத்திருந்தார் சச்சின். இதிலும் மும்பை அணி 297 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

2007-ம் ஆண்டு பிப்ரவரி 2-6 வரை மும்பையில் பெங்கால் அணிக்கு எதிரான போட்டியில் 105 மற்றும் 43 ரன்களைக் குவித்தார் சச்சின். இதில் 132 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி பெற்றது.

2009-ம் ஆண்டு ஹைதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் உத்தரப்பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் முதல் இன்ங்சில் டக் அவுட் ஆனார்.. அடுத்த இன்னிங்சில் 4 ரன்கள்தான் எடுத்தார் சச்சின். ஆனாலும் மும்பை அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பார்ப்போம் இந்த பைனல் மேட்ச் எப்படி இருக்கும் என..?

Story first published: Monday, January 21, 2013, 15:55 [IST]
Other articles published on Jan 21, 2013
English summary
Sachin Tendulkar is set to make his sixth Ranji Trophy final appearance for Mumbai, against Saurashtra in Mumbai from January 26. Tendulkar, who has played three Ranji Trophy matches this season for Mumbai including quarter-final and semi-final, is almost certain to pad up in the title clash too. Of the five finals, Mumbai won four and lost the other match.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+