Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்தை வென்றது தென் ஆப்ரிக்கா-அயர்லாந்தை வீழ்த்தியது நியூசிலாந்து

லண்டன்: டுவென்டி-20 உலக கோப்பை சூப்பர்-8 சுற்று போட்டியில் தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து அணியையும், நியூசிலாந்து அணி, அயர்லாந்தையும் வீழ்த்தின.

டுவென்டி-20 உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடக்கிறது. லீக் போட்டிகள் முடிந்த நிலையில் சூப்பர்-8 சுற்றுக்கு 8 அணிகள் தகுதி பெற்றன. இதில் இந்தியா, தென்ஆப்ரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஒரு பிரிவிலும், பாகிஸ்தான், நியூசிலாந்து, அயர்லாந்து, இலங்கை அணிகள் மற்றொரு பிரிவிலும் பங்கேற்கின்றன.

நேற்று நடந்த முதல் சூப்பர்-8 போட்டியில் நியூசிலாந்து, அயர்லாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த நியூசிலாந்து 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது. அணியின் துவக்க வீரர் ரெட்மான்ட் 30 பந்தில் 63 ரன்கள் எடுத்தார். குப்டில் 45, ஸ்டைரிஸ் 42 அவர்களுக்கு நல்ல ஒத்துழைப்பு தந்தனர்.

அடுத்து பேட் செய்த அயர்லாந்து 16.4 ஓவரில் 115 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி 83 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

தென் ஆப்ரிக்கா அசத்தல்...

இரண்டாவது போட்டியில் தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணிக்கு பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் அளித்தனர். கேப்டன் பீட்டர்சன் 19, ஓவைஸ் ஷா 38, கோலிங்வுட 19 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். இங்கிலாந்து 19.5 ஓவரில் 111 ரன்கள் ம்டடுமே எடுத்தது.

அடுத்து பேட் தென் ஆப்ரி்க்கா 18.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. தென் ஆப்ரிக்கா சார்பில் கிப்ஸ் 30 ரன்கள் எடுத்தார். காலிஸ் ஆட்டமிழக்காமல் 57 ரன்கள் எடுத்தார்.

இன்று இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதல்...

இன்று நடக்கும் சூப்பர்-8 சுற்றுப் போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடுகின்றன. சூப்பர் பார்மில் இருக்கும் இந்திய அணி இப்போட்டியில் வென்று அசத்தும் என எதிர்பார்க்கலாம். இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 10.00 மணிக்கு துவங்குகிறது.

இன்று மாலை 6 மணிக்கு நடக்கும் போட்டியில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதுகின்றன.

Story first published: Wednesday, December 7, 2011, 18:27 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+