Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேப்டன்னா கம்முனு இருக்கனும்.. சொல்கிறார் ரோஹித்

Rohit sharma
மும்பை: கேப்டன் பொறுப்பு என்பது சாதாரணமானது அல்ல. மிகவும் நிதானமாக, பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்படும் ரோஹித் சர்மா.

தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில் கேப்டன் பொறுப்பில் சிறப்பாக செயல்படுகிறார் ரோஹித் என்று பாராட்டுக்கள் குவிகின்றன. அதேபோல பேட்டிங்கிலும் தனது திறமையைக் காட்ட அவர் தவறவில்லை. அதிலும் கலக்கி வருகிறார்.

கேப்டன் பொறுப்பு குறித்து அவரிடம் கேட்டபோது, கேப்டன் பொறுப்பு என்பது சாதாரணமானதல்ல. எனக்கு அதிர்ஷ்டவசமாக அது சுமையாக அமையவில்லை. ஆனால் இந்தப் பொறுப்பில் மிகவும் நிதானமாக, பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம்.

எனது தலைமையில் ஐந்து போட்டிகளை மும்பை சந்தித்துள்ளது. அதில், நான்கு போட்டிகளில் வென்றுள்ளோம். ஒன்றில் தோற்றோம். இன்னும் நாங்கள் நிறைய நல்ல போட்டிகளை ஆட வேண்டியுள்ளது. பிளே ஆப் பிரிவுக்குள் நுழைவதை நாங்கள் உறுதியாக்க வேண்டும். அதுதான் தற்போது எனது முழுக் கவனமாக உள்ளது என்றார் சர்மா.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக முதலில் செயல்பட்டவர் ரிக்கி பான்டிங். ஆனால் அவரது ஆட்டம் சொதப்பியதால், கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு சர்மா கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

Story first published: Tuesday, May 7, 2013, 14:11 [IST]
Other articles published on May 7, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+