Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உங்களை லிஸ்டில் சேர்க்க முடியாது.. ஸ்ரீசாந்துக்கு இடியாக வந்த செய்தி.. ஐபிஎல் ஏலத்தில் பரபர டிவிஸ்ட்

சென்னை: ஐபிஎல் 2021 தொடரில் விளையாடலாம் என்று ஆர்வமாக இருந்த ஸ்ரீசாந்த் பெயர் தற்போது ஏலம் விடபடும் வீரர்களின் பட்டியலில் இடம்பெறவில்லை.

2021 ஐபிஎல் தொடருக்கான ஏலம் அடுத்த மாதம் 18ம் தேதி நடக்க உள்ளது. சென்னையில் நடக்கும் இந்த ஏலத்தில் முக்கியமான வீரர்கள் பலர் ஏலம் விடப்பட வாய்ப்புள்ளது.

இதுவரை ஐபிஎல்லில் இடம்பெறாத வீரர்கள் பலர் இந்த முறை ஏலம் விடப்பட வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் இதுவரை ஐபிஎல்லில் விளையாடி வந்த பல வீரர்கள் வாய்ப்பை இழக்க நேரிடும் என்றும் கூறுகிறார்கள்.

சென்னை

சென்னை

2021 ஐபிஎல் ஏலம் இப்படி பரபரப்பாக தயாராகி வரும் நிலையில் இந்த ஏலத்திற்காக பல வீரர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து இருந்தனர். இளம் வீரர் அர்ஜுன் டெண்டுல்கர் தொடங்கி ஸ்ரீசாந்த் வரை பலரும் இந்த தங்கள் பெயரை பதிவு செய்து இருந்தனர். மொத்தம் 1114 வீரர்கள் இப்படி பெயரை பதிவு செய்து இருந்தனர்.

வீரர்கள்

இந்த நிலையில் இந்த ஏலத்திற்கு செல்ல தேர்வு செய்யப்பட்ட வீரர்களின் பட்டியல் நேற்று வெளியானது . மொத்தம் 290 வீரர்கள் இந்த ஏலத்திற்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதில் 164 வீரர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள். 123 வீரர்கள் வெளிநாட்டு வீரர்கள்.

லிஸ்ட்

லிஸ்ட்

3 வீரர்கள் எந்த அணியையும் சேராத அமெரிக்கா போன்ற நாடுகளை சேர்ந்த வீரர்கள். இந்த நிலையில் இந்த லிஸ்டில் நேற்று ஸ்ரீசாந்த் பெயர் இடம்பெறவில்லை. தடைக்கு பின் இந்த ஐபிஎல் தொடரில் ஆட வேண்டும் என்றது ஸ்ரீசாந்த் ஆர்வமாக இருந்தார் .

ஆர்வம்

ஆர்வம்

இதற்காக அவர் கடுமையாக பயிற்சி செய்தார். அதோடு சையது முஷ்டாக் கோப்பையிலும் சுமாராக பவுலிங் செய்தார். இதில் சில விக்கெட்டுகளை கூட ஸ்ரீசாந்த் எடுத்தார். மீண்டும் இந்திய அணிக்குள் வருவதே என்னுடைய நோக்கம் என்று ஸ்ரீசாந்த் குறிப்பிட்டார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் தற்போது இவரின் பெயரே ஏலம் விடப்பட உள்ள வீரர்களின் லிஸ்டில் இல்லை. இதனால் இவர் மீண்டும் கம்பேக் கொடுப்பது கனவாக மாறி உள்ளது. மீண்டும் கிரிக்கெட்டில் கவனம் பெறலாம் என்று நினைத்தவருக்கு இந்த செய்தி இடியாக வந்துள்ளது. இவரின் வயது மற்றும் சையது முஷ்டாக் அலி கோப்பையில் ஆடிய விதம் இதை வைத்து இவரின் பெயர் புறக்கணிக்கப்பட்டு இருக்கலாம் என்கிறார்கள்.

தடை

தடை

2013ல் ஐபிஎல் தொடரின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி ஸ்ரீசாந்த்திற்கு தடை விதிக்கப்பட்டது. ஸ்ரீசாந்த் மீதான தடை காலம் முடிவிற்கு வந்த நிலையில் மீண்டும் முதல்தர போட்டிகளில் அவர் ஆடி வருகிறார்.இடையில் தடை காலத்தில் ஸ்ரீசாந்த் கிரிக்கெட் போட்டிகளில் ஆடவில்லை. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி, சினிமா, பாஜகவில் இணைந்து அரசியல் என்று இவர் பிசியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, February 12, 2021, 22:46 [IST]
Other articles published on Feb 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+