Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தல பேன்ஸ்.. இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும்.. அஜித்தை வைத்து தல தோனியை சீண்டும் ஸ்ரீசாந்த்.. ஷாக்

சென்னை: 2021 ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் இருக்கும் ஸ்ரீசாந்த் தற்போது தல தோனியை சீண்டும் வகையில் வீடியோ வெளியிட்டு உள்ளார்.

ஐபிஎல் 2021 தொடரில் விளையாடலாம் என்று ஆர்வமாக இருந்த ஸ்ரீசாந்த் பெயர் தற்போது ஏலம் விடபடும் வீரர்களின் பட்டியலில் இடம்பெறவில்லை. ஐபிஎல் ஏலத்திற்காக மொத்தம் 1114 வீரர்கள் பெயரை பதிவு செய்து இருந்தனர்.

இதில் 250 பேரின் பெயர்களை ஐபிஎல் நிர்வாகம் ஏலத்திற்கு அனுமதித்து இருக்கிறது. ஐபிஎல் தொடருக்கு ஸ்ரீசாந்த் தேர்வாகவில்லை.

 தேர்வாகவில்லை

தேர்வாகவில்லை

இவரின் வயதை காரணம் காட்டியும், பல வருடமாக இவர் கிரிக்கெட் ஆடாத காரணத்தாலும் இவரின் பெயரை ஐபிஎல் அணி நிர்வாகம் எடுக்கவில்லை. சையது முஷ்டாக் கோப்பை தொடரிலும் இவர் சரியாக ஆடவில்லை. இதன் காரணமாக தற்போது ஐபிஎல்லில் கம் பேக் கொடுக்கும் இவரின் கனவும் காலியாகி உள்ளது.

கனவு

கனவு

இவருக்கு வாய்ப்பு கிடைக்காததற்கு தோனி ஒரு காரணம் என்று இணையத்தில் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். தோனியை ஸ்ரீசாந்த் சீண்டி வந்தார். தோனிக்கு எதிராக கருத்து கூறினார். இதனால் தற்போது ஸ்ரீசாந்திற்கு வாய்ப்பு பறிபோய்விட்டது என்று கூறியுள்ளனர்.

வீடியோ

வீடியோ

தோனியை தல என்று அழைக்க கூடாது.. ஒரே தல அஜித் மட்டும்தான் என்று கூறி ஸ்ரீசாந்த் கடந்த வருடம் டிவிட் வெளியிட்டு இருந்தார். தோனிக்கு எதிராக பலமுறை இப்படி கருத்து கூறி ஸ்ரீசாந்த் சர்ச்சையில் சிக்கி உள்ளார். இந்த நிலையில் ஐபிஎல்லில் வாய்ப்பு கிடைக்காத கோபத்தில் ஸ்ரீசாந்த் மீண்டும் தோனியை சீண்டி இருக்கிறார்.

சீண்டல்

சீண்டல்

2021 ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் இருக்கும் ஸ்ரீசாந்த் தற்போது தல தோனியை சீண்டும் வகையில் வீடியோ வெளியிட்டு உள்ளார். அதன்படி அஜித்தின், இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும்...

எல்லா சூழ்நிலையிலும்...'நீ தோத்துட்ட... நீ தோத்துட்டன்னு 'உன் முன்னாடி நின்னு அலறினாலும்... நீயா ஒத்துக்கிற வரைக்கும் எவனாலும் எங்கேயும் எப்பவும் உன்னை ஜெயிக்க முடியாது...! என்ற விவேகம் படத்தின் வசனத்தை வைத்த வீடியோ வெளியிட்டுள்ளார்.

கோபம்

இதில் ஸ்ரீசாந்த், என்னை ஜெயிக்க முடியாது. நான் மீண்டும் வருவேன். கண்டிப்பாக வருவேன். லேட்டஸ்ட்டாக வருவேன் என்று கோபமாக குறிப்பிட்டுள்ளார். யாருக்கோ சவால் விடும்படி ஸ்ரீசாந்த் இப்படி குறிப்பிட்டு இருக்கிறார். இந்த டிவிட்டிற்கு சில அஜித் ரசிகர்கள் ஆதரவாகவும், சிலர் எதிராகவும் டிவிட் செய்து வருகிறார்கள்.

Story first published: Friday, February 12, 2021, 23:17 [IST]
Other articles published on Feb 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+