Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பைக்கு ராசியான இலக்கை நிர்ணயித்த SRH.. பேட்டிங்கில் கலக்கிய காஷ்மீர் வீரர்.. காவ்யாவுக்கு கஷ்டம்?

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 201 ரன்களை வெற்றி இலக்காக ஐதராபாத் அணி நிர்ணயித்துள்ளது. பிளே ஆப்க்கு மும்பை அணி செல்ல வேண்டும் என்றால், இன்றைய ஆட்டத்தில் அவர்கள் வெற்றி பெற வேண்டும்.

மேலும் பெங்களூரு அணி , தங்களது கடைசி ஆட்டத்தில் தோற்க வேண்டும். ஒரு வேளை ஆர்சிபியும் வெற்றி பெற்றால், மும்பை அணியின் ரன் ரேட் குறைவாக இருக்கும். இதனால், மும்பை அணி, 201 ரன்கள் என்ற இலக்கை 11.5 வது ஓவரில் எட்ட வேண்டும்.

SRH set comfortable target of 201 for Mumbai indians to win

சேஸிங்கில் வான்கடே மைதானத்தில் 200 ரன்களை எளிதாக கடந்திருக்கிறது. இதனால் டாஸ் வென்ற ரோகித் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணியின் காஷ்மீர் வீரர் விவராந்த் சர்மாவும், மாயங் அகர்வாலும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

இந்த ஜோடியை பிரிக்க மும்பை எடுத்த முயற்சி பலன் அளிக்கவில்லை. இந்த தொட்ர் முழுவதும் சொதப்பிய மாயங் அகர்வால் அதற்கு பரிகாரம் தேடும் வகையில், பேட்டிங்கில் 4 சிக்சர், 8 பவுண்டரிகளை அடித்துள்ளார். இதனால் 46 பந்தில் மாயங் அகர்வால் 83 ரன்களை விளாசினர்.

இதனையடுத்து இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 140 ரன்களை சேர்த்தது. ஆனால், அதன் பிறகு மும்பை அணியின் ஆகாஷ் மத்வால் அபாரமாக பந்துவீசி, ஐதராபாத் அணியின் முக்கிய விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினார். இதன் மூலம் 240 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டிய ஐதராபாத் அணி வெறும் 200 ரன்களை மட்டுமே எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்தது.

Story first published: Sunday, May 21, 2023, 17:49 [IST]
Other articles published on May 21, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+