ஆர்சிபி அணிக்கு ஆப்பு.. உச்சம் சென்ற ஐதராபாத்.. ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை குவித்த டாப் 5 அணிகள்!
ஐதராபாத் : 17 ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை விளாசிய அணிகளின் பட்டியலை பார்க்கலாம்.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளது. 14.4 ஓவர்களில் 200 ரன்களை கடந்த ஐதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 277 ரன்களை குவித்துள்ளது. சிறப்பாக விளையாடிய கிளாசன் 34 பந்துகளில் 7 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 80 ரன்களை விளாசி அசத்தியுள்ளார்.

அதேபோல் டாப் ஆர்டரில் விளையாடிய அபிஷேக் சர்மா 23 பந்துகளில் 7 சிக்ஸ், 3 பவுண்டர் உட்பட 63 ரன்களையும், டிராவிஸ் ஹெட் 24 பந்துகளில் 3 சிக்ஸ், 9 பவுண்டரி உட்பட 62 ரன்களையும் விளாசினர். இதன் மூலம் 17 ஆண்டு கால ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை விளாசி ஐதராபாத் அணி புதிய சாதனையை படைத்துள்ளது.
இதற்கு முன்பாக 2013ஆம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி அணி தரப்பில் 263 ரன்கள் விளாசப்பட்டதே சாதனையாக இருந்தது. அந்த போட்டியில் ஆர்சிபி அணியின் தொடக்க வீரர் கிறிஸ் கெய்க் 175 ரன்களை விளாசி இருந்தார். அதன்பின் கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 257 ரன்களை குவித்திருந்தது. அதேபோல் 2016ஆம் ஆண்டு குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 248 ரன்களை குவித்திருந்தது.
அதேபோல் 2010ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி தரப்பில் 246 ரன்கள் சேர்ப்பட்டிருந்தது. இந்த பட்டியலில் 277 ரன்கள் குவித்து ஐதராபாத் அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேபோல் இந்த போட்டியில் ஐதராபாத் அணி தரப்பில் 18 சிக்சர்கள் அடிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ஆர்சிபி அணி 21 சிக்சர்களுடன் முதலிடத்திலும், மீண்டும் 20 சிக்சர்களுடன் ஆர்சிபி அணி 2வது இடத்திலும் உள்ளன. தற்போது 18 சிக்சர்களுடன் ஐதராபாத் அணி ஆர்சிபி, சிஎஸ்கே, ராஜஸ்தான் ஆகிய அணிகளுடன் 3வது இடத்தை பகிர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications