லக்னோ: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்று அசத்தியுள்ளது. இந்தப் போட்டியில் நடந்த சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணியில் கைல் மேயர்ஸ் நீக்கப்பட்டு, தொடக்க வீரராக தீபக் ஹூடா களமிறக்கப்பட்டார். ஆனாலும் 5 ரன்களில் ஹூடா ஆட்டமிழந்து வெளியேறினார். நடப்பு சீசனில் 11 இன்னிங்ஸ்கள் விளையாடி 64 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ள ஹூடாவின் பேட்டிங் கடுமையான விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. இந்த நிலையில் ஆட்டமிழந்து நடையை கட்டும் ஹூடாவை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அடிக்க காத்திருப்பது போல் உருவாக்கப்பட்ட மீம் தெறி.

நேற்றையப் போட்டியில் மும்பை அணிக்காக ஆடிய க்ருனால் பாண்டியா, டி காக் ஆகியோர் லக்னோ அணியில் விளையாடினர். இதில் விக்கெட் கீப்பராக டி காக் நிற்க, க்ருனால் பாண்டியா பந்துவீச, இஷான் கிஷன் பேட்டிங் செய்தார். ஒரு காலத்தில் ஒன்றாக ஆடிய வீரர்கள் எதிரெதிர் அணிகளுக்காக ஆடுவது மும்பை அணி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் சிரித்துக் கொண்டே பார்க்க தொடங்கி கதறி கதறி அழுவது போல் சிறுவனை வைத்து உருவாக்கப்பட்ட மீம் எமோஷனல் டச்.

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் யாதவ் பந்தை ஃபைன் லெக் திசையில் அடிக்க முயன்று போல்டானார். வான்கடே மைதானத்தில் சிதறடிக்கும் சூர்யகுமார் யாதவ், வெளி மாநில மைதானங்களில் சொதப்புகிறார். அதனை காஞ்சனா படத்தில் லாரன்ஸ், "அது சிவா.. நான் காஞ்சனா" என்று சொல்லும் வசனத்தை மாற்றி, "அது வான்கடே.. இது லக்னோ ஏகானா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் வெறித்தனம்.

லக்னோ அணி வெற்றிபெற கடைசி ஓவரில் வெறும் 11 ரன்களை கட்டுப்படுத்த வேண்டிய சூழல் இருந்தது. மும்பை அணி சார்பாக களத்தில் டிம் டேவிட் மற்றும் கேமரூன் க்ரீன் இருந்தனர். ஏற்கனவே இதுபோன்ற போட்டிகளை இருவரும் மும்பை அணிக்காக முடித்து கொடுத்துள்ளனர். ஆனால் மோசின் கான் வீசிய கடைசி ஓவரில் 5 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. இதனை தனுஷ் நடித்த படிக்காதவன் படத்தில் ஒரே ஆளாக வில்லனை அடித்து துவம்சம் செய்யும் தனுஷ் எழுந்து நடந்து வருவதுடன் ஒப்பிட்டு உருவாக்கப்பட்டுள்ள மீம் மரண மாஸ்.

நேற்றையப் போட்டியில் லக்னோ அணிக்காக கடைசி ஓவரை வீசிய மோசின் கான், 2018, 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் மும்பை அணியில் இருந்தவர். ஆனால் மும்பை அணி அவரை பயன்படுத்திக் கொள்ளவில்லை. இந்த நிலையில் லக்னோ அணிக்காக அசாத்திய வெற்றியை மோசின் கான் பெற்றுக் கொடுத்துள்ளார். இதனை வடசென்னை படத்தில் கிஷோர் பேசும், "அவன் பொருள எடுத்து அவனையே போடனும்டா" என்று சொல்வார். அதில் கிஷோராக கம்பீரை மாற்றி, "அவன் பொருள எடுத்து அவன போடனும்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மெர்சல்.