Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

”வாயைவிட்டு வம்புக்கு இழுத்த பாண்டியா” ஹர்திக்கை வச்சு செய்யும் பல்தான்ஸ்.. வேற லெவல் மீம்ஸ்!

மும்பை: குஜராத் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றியை பதிவு செய்தது. இதில் நடந்த சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

இரு நாட்களுக்கு முன் மும்பை அணி குறித்து ஹர்திக் பாண்டியா பேசுகையில், மும்பை அணி ஸ்டார் வீரர்களை ஏலத்தில் வாங்கி சாம்பியனாகிறது. சென்னை அணி போல் அல்ல. சென்னை அணியின் பாதையையே குஜராத் அணியின் பின்பற்றுகிறது என்று கூறி இருந்தார். இது மும்பை ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனை என்ன அறிந்தால் படத்தில் அருண் விஜயை பார்த்து அஜித், ஸ்பீச்சா கொடுக்குற என்று ஆக்ரோஷமாக வசனம் பேசுவார். இதனை ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியாவை பார்த்து பேசுவது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் வெறித்தனம்.

Stunning memes from Social Media after Mumbai Indians beat Gujarat Titans by 27 Runs in IPL 2023

நேற்றையப் போட்டியில் 49 பந்துகளில் மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ் சதம் விளாசி அசத்தினார். ஜெயசூர்யா, சச்சின், ரோகித் சர்மா மற்றும் சிம்மன்ஸ் ஆகியோருக்கு பின் சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை சூர்யகுமார் யாதவ் படைத்தார். இதனை தலைநகரம் படத்தில் மயில்சாமி வடிவேலுவை பார்த்து, :சிவாஜி, ரஜினி, கமல் இவங்களுக்கு அப்புறம் இந்த கெட்டப் உங்களுக்கு தான் பொருத்தமா இருக்கு" என்பார். அதனை மயில்சாமி சூர்யாவை பார்த்து, இவங்களுக்கு அப்புறம் இந்த செஞ்சுரி சூட் ஆகுதுனா அது உங்களுக்குதான் என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் அசத்தல்.

Stunning memes from Social Media after Mumbai Indians beat Gujarat Titans by 27 Runs in IPL 2023

நேற்றையப் போட்டியில் மும்பை அணியின் விஷ்ணு வினோத் 20 பந்துகளில் 30 ரன்கள் விளாசி அசத்தினார். இதனை வேட்டையாடு விளையாடு படத்தில் கமல்ஹாசன், "என் கண்ணு வேணும்னு சொன்னியாமே" என்று வில்லனை பார்த்து கேட்பார். அதனை மாற்றி ஹர்திக் பாண்டியாவை பார்த்து ரோகித் சர்மா, "ஸ்டார் பிளேயர்ஸ் வச்சு மட்டும்தான் விளையாடுவோம்னு சொன்னியாமே" என்று கேட்பது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் மிரட்டல்.

Stunning memes from Social Media after Mumbai Indians beat Gujarat Titans by 27 Runs in IPL 2023

குஜராத் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தியது. இதனை, புதுப்பேட்டை படத்தில் வரும் கொக்கி குமாரை பார்த்து, அழகம் பெருமாள் கதாபாத்திரம், "நக்கல்யா உனக்கு" என்று சொல்லுவார். அதனை மும்பை ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவை பார்த்து, "என்ன பாண்டியா.. எங்க பெஸ்ட் பிளேயர்ஸ் ஆட்டம் எப்படி இருந்துச்சு.. நக்கல்யா உனக்கு" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல்.

Stunning memes from Social Media after Mumbai Indians beat Gujarat Titans by 27 Runs in IPL 2023

குஜராத் அணி சார்பாக கடைசி நேரத்தில் களமிறங்கிய ரஷித் கான், 32 பந்துகளில் 79 ரன்களை விளாசினார். அதில் 10 சிக்சர்களும் அடங்கும். மும்பை அணி ஒரு 20 ரன்களை குறைவாக அடித்திருந்தால் கூட, குஜராத் அணி சம்பவம் செய்திருக்கும். அதனை சுப்ரமணியபுரம் படத்தில் ஜெய், "எனக்கு சாவு பயத்த காட்டிட்டான் பரமா" என்று சொல்லுவார். அதனை மும்பை அணி பேசுவது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் மாஸ்.

Stunning memes from Social Media after Mumbai Indians beat Gujarat Titans by 27 Runs in IPL 2023
Story first published: Saturday, May 13, 2023, 7:41 [IST]
Other articles published on May 13, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+