For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. இது விராட் கோலி கோட்டை டி.. தெறி மீம்ஸ் வெளியிட்ட ஆர்சிபி ரசிகர்கள்!

பெங்களூரு: மும்பை அணி நிர்ணயித்த 172 ரன்கள் இலக்கை 16.2 ஓவர்களில் சேஸ் செய்த கிங் விராட் கோலி குறித்து வெளியாகி வரும் மீம்ஸ்களை ஒன்றாக பார்க்கலாம்.

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூரு - மும்பை அணிகள் மோதின. 4 ஆண்டுகளுக்கு பின் சின்னசாமி மைதானத்தில் போட்டிகள் நடைபெற்றதால், ரசிகர்களிடையே அதிகம் எதிர்பார்க்கப்பட்டது.

stunning memes from social media after rcb King Virat Kohli beats Mumbai in IPL 2023

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி திலக் வர்மாவின் அபார ஆட்டத்தால் 171/7 ரன்கள் குவித்தது. அதன்பின்னர் பெங்களூரு அணி சார்பாக விராட் கோலி 82* ரன்களும், டூ பிளசிஸ் 73 ரன்களும் குவித்தனர். 16.2 ஓவர்களிலேயே மும்பை அணியை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றிபெற்றது. இதுகுறித்து ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸ்களை பார்க்கலாம்.

கில்லி படத்தில் திரிஷாவை கடத்திக் கொண்டு விஜய் வந்துவிடுவார். மதுரையின் ஒரு பகுதியில் வில்லன் முத்துப்பாண்டி விஜய் மற்றும் திரிஷாவை சுற்றி வளைப்பார்கள். அப்போது பிரகாஷ்ராஜ், "இந்த மதுரை முத்துப்பாண்டியோட கோட்டை டி" என்று வெறித்தன வசனம் பேசுவார். அந்த அளவிற்கு ஆட்களும் அதிகாரமும் முத்துப்பாண்டியிடம் இருக்கும். பெங்களூரு மைதானத்தில் நடந்த போட்டியில் விராட் கோலியின் அதிரடியும், ரசிகர்களின் ஆதரவும் பார்த்துவிட்டு, பிரகாஷ் ராஜ் வசனத்தை மாற்றி விராட் கோலி, "இந்த பெங்களூரு முத்துப்பாண்டியோட கோட்டை டி" என்று மும்பை அணியை பார்த்து பேசுவது போல் உருவாக்கப்பட்ட மீம் வெறித்தனம்.

stunning memes from social media after rcb King Virat Kohli beats Mumbai in IPL 2023

கடந்த ஐந்து ஐபிஎல் போட்டிகளிலும் பெங்களூரு அணி மும்பை அணியை வீழ்த்தி அசரடித்துள்ளது. ஆனால் சென்னை - மும்பை அணிகளுக்கு இடையிலான நேருக்கு நேர் மோதலில், மும்பை அணிக்கு முன்னிலையில் உள்ளது. இதனால் ஆர்ஆர்ஆர் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் ராம்சரணிடம் ஜூனியர் என்டிஆர், "கல்வியை கற்று கொடுணா" என்று கேட்பார். அதுபோல் மும்பை அணியை வீழ்த்த பெங்களூரு அணியிடம் சென்னை அணி கேட்பது போல், "பல்தான்ஸ பதம் பார்க்குறது எப்படினு கற்று கொடுணா" என்று உருவாக்கப்பட்ட மீம் நக்கல்.

stunning memes from social media after rcb King Virat Kohli beats Mumbai in IPL 2023

நேற்றைய போட்டியில் மும்பை அணிக்காக வேகப்பந்துவீச்சாளர் ஆர்ச்சர் அறிமுகமானார். ஆர்ச்சர் மீண்டும் வருவதால் சமூக வலைதளங்களில் மும்பை ரசிகர்கள் அளவுக்கு அதிகமாக ஆவாஸ் காட்டிக் கொண்டு இருந்தார்கள். ஆனால் ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரிலேயே டவுன் தி டிராக் இறங்கி வந்து விராட் கோலி சிக்சர் விளாசுவார். இதனை கிண்டல் செய்யும் வகையில், திருமலை படத்தில் வில்லன் அரசு-வை தேடி வரும் போது, எவன்டா இங்க அரசு? எவன்டா இங்க அரசு? என்று ஆவேசமாக வருவார். அதுபோல் விராட் கோலி நேற்று தேடி தேடி அடித்ததாக உருவாக்கப்பட்ட மீம் ஃபயர் மெட்டீடியல்.

stunning memes from social media after rcb King Virat Kohli beats Mumbai in IPL 2023

அதேபோல் ஆர்ஆர்ஆர் படத்தில் வரும் "நாட்டு நாட்டு" பாடலில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் போட்டிப் போட்டுக் கொண்டு நடனமாடுவார்கள். அந்தப் பாடலை பார்க்கும் அனைவருக்கும் கூல்பம்ப் வரும் அளவிற்கு நடனம் அமைந்திருக்கும். நேற்று நடந்த போட்டியில் விராட் கோலி - டூ பிளசிஸ் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் மும்பை பந்துவீச்சாளர்களை வேட்டையாடினார்கள். இதனால் நாட்டு நாட்டு பாடலில் வரும் ஜூனியர் என்டிஆராக விராட் கோலியையும், ராம் சரணாக டூ பிளசிஸையும் வைத்து உருவாக்கப்பட்ட மீம் அக்மார்க் மாஸ் கன்டென்ட்.

stunning memes from social media after rcb King Virat Kohli beats Mumbai in IPL 2023

நேற்றையப் போட்டியில் மட்டும் ஆர்ச்சர் பந்துவீச்சில் 28 ரன்களை விராட் கோலி விளாசி தள்ளி இருப்பார். இதுவரை டி20 கிரிக்கெட்டின் ஒரே போட்டியில் ஆர்ச்சரை யாரும் இந்த அளவிற்கு அடித்ததே இல்லை. இதனை குறிப்பிட்டு சென்னை 28 படத்தில் வரும் ஏழுமலை கதாபாத்திரம் நடிகர் ஜெய்யிடம் "போலீஸ்காரரோட பையன்னா பெரிய பருப்பா நீ" என்று நெஞ்சில் முட்டிக் கொண்டு சண்டைக்கு போவார். அதனை அப்படியே மாற்றி, ஆர்ச்சரின் நெஞ்சில் விராட் கோலி முட்டி, "பெரிய பருப்பா நீ" என்று கேட்கும் வசனம் அட்டகாசமான நகைச்சுவை.

Story first published: Monday, April 3, 2023, 7:47 [IST]
Other articles published on Apr 3, 2023
English summary
RCB vs MI: After RCB defeats Mumbai by 8 Wickets, Fans created some exiciting Memes in Social Media with King Virat Kohli batting in IPL 2023.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+