Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வான்கடே யாரோட கோட்டை ராஜா? மும்பை ரசிகாஸ் நெஞ்சங்கள் பாவம்யா.. தெறிக்கும் சென்னை மீம்ஸ் இதோ!

மும்பை: 16வது ஐபிஎல் தொடரின் 12வது லீக் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து சென்னை அணி விளையாடி வருகிறது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணியின் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், சான்ட்னர் மற்றும் துஷார் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனை வைத்து சிஎஸ்கே ரசிகர்கள் உருவாக்கியுள்ள மீம்ஸ்களை பார்க்கலாம்.

Stunning Memes of Chennai Super kings bowling against Mumbai Indians in IPL 2023

சென்னை அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை நேற்று வெளியான புஷ்பா - 2 ட்ரெய்லரில், எல்லாரும் புலியா பாத்தா 2 அடி தள்ளிப் போவாங்க.. ஆனால் புஷ்பாவ பார்த்தா புலியே 2 அடி பின்னாடி போகும் என்று ஒரு வசனம் வரும். அதில் புஷ்பா அல்லு அர்ஜூனாக ஜடேகாவாகவும், பின்னால் பயந்து நகரும் புலியாக மும்பை அணியாகவும் உருவாக்கியுள்ள மீம்ஸ் மாஸ் ரகம்.

Stunning Memes of Chennai Super kings bowling against Mumbai Indians in IPL 2023

இன்றைய ஆட்டத்தில் சான்ட்னர் வீசிய பந்தில் சூர்யகுமார் யாதவ் தோனியிடம் கேட்ச்சானார். அதனை தோனி நடுவரிடம் அப்பீல் கேட்ட போது, உடனடியாக தோனி டிஆர்எஸ் அப்பீலுக்கு சென்றார். இதன் பின்னர் மூன்றாம் நடுவரிடம் இருந்து அவுட் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன் பின் கள நடுவர் மன்னிப்பு கேட்டு, அவுட் வழங்கினார். இதில் தோனி டிஆர்எஸ் எடுக்கும் புகைப்படத்தையும், நடுவர் மன்னிப்பு கேட்கும் புகைப்படத்தையும் வைத்து "தோனி ரிவ்யூ சிஸ்டம்" என்று உருவாக்கப்பட்ட மீம் தல தோனியின் வெறித்தன ஃபேன்ஸ்கானது.

Stunning Memes of Chennai Super kings bowling against Mumbai Indians in IPL 2023

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் இளம் வீரர் திலக் வர்மா 84 ரன்கள் குவித்து மும்பை அணியை காப்பாற்றி இருப்பார். ஆனால் இந்தப் போட்டியில் 18 பந்துகளில் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனை கலகலப்பு படத்தில் வரும் அஞ்சலி தனது மாமாவான சந்தானத்திடம், "எனக்கு சீனுவ தான் கல்யாணம் பன்னனும் மாமா" என்ற வசனத்தை மாற்றி, திலக் வர்மா ரோகித் சர்மாவிடம், "எல்லா மேட்சும் நானே காப்பாற்ற முடியாது" என்று சொல்லும் மீம் அட்ராசக்க ரகம்.

Stunning Memes of Chennai Super kings bowling against Mumbai Indians in IPL 2023

அதேபோல் ஜடேஜா புஷ்பா படத்தின் மிகத்தீவிர ரசிகர். களத்தில் கூட "அடங்காதவன் டா" ஸ்டைலில் தாடியை அடிக்கடி தடவி விடுவார். தற்போது அதே புஷ்பா படத்தில் வரும் "புஷ்பானா பிளவர்னு நினைச்சியா.. ஃபயரு டா" என்று வசனத்தோடு, ஜடேஜாவின் புகைப்படத்தை இணைத்து உருவாக்கப்பட்ட மீம் ஃபயர் ஃபீல்.

Stunning Memes of Chennai Super kings bowling against Mumbai Indians in IPL 2023

அதேபோல் கேமரூன் கிரீனுக்கு ஜடேஜா கண்களை மூடிக் கொண்டு கேட்ச் பிடித்தார். அதனை சென்னை - 28 படத்தில் கேட்ச் பிடிக்க தெரியாத பிரேம்ஜி, கண்களை மூடிக் கொண்டு கேட்ச் பிடிக்கும் புகைப்படத்தோடு உருவாக்கப்பட்ட மீம் தான் இன்றைய நாளின் ஹைலைட். பந்தை அவர் பிடிக்கவில்லை, பந்துதான் ஜடேஜாவை பிடித்தது என்று ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

Story first published: Saturday, April 8, 2023, 22:07 [IST]
Other articles published on Apr 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+