Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

10வது ஐபிஎல் கிரிக்கெட்... அதிரடி ரன் குவிப்பில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்!

ஹைதராபாத்: 10வது ஐபிஎல் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஆடி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்து வரும் சன்ரைசர்ஸ் அணி அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது.

10வது ஐபிஎல்லின் முதல் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

sun risers lost 3 wickets at the end of 17 overs with 162 runs

இதைத்தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக அந்த அணியின் டேவிட் வார்னரும், ஷிகர் தவனும் களமிறங்கினர்.

தொடக்கம் முதலே அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர். போட்டியின் இரண்டாவது ஓவரில் கேப்டன் டேவிட் வார்னர் சவுத்ரியின் பந்தில் மந்தீப் சிங்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

இதைத்தொடர்ந்து 3வது வீரராக களமிறங்கிய ஹென்றிக்யூஸ், ஷிகர் தவான் பார்ட்னர்ஷிப் வலுவானதாக இருந்தது. அந்த ஜோடிகள் பந்துகளை நாலாபுறமும் சிதறவிட்டதனர். ரன் ராக்கெட் வேகத்தில் குவிந்தது.

10.3 ஓவரில் இந்த கூட்டணியை பிரித்தார் ஸ்டூவர்ட் பின்னி. பின்னியின் பந்துவீச்சில் சச்சின் பேபியிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார் ஷிகர் தவான்.

இதைடுத்து நான்காவது வீரராக யுவராஜ் சிங் களமிறங்கி யுவராஜ் சிங் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அரைசதம் விளாசி யுவராஜ் சிங், 27 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 207 ரன்கள் எடுத்தது.

Story first published: Thursday, April 6, 2017, 1:50 [IST]
Other articles published on Apr 6, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+