Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரஹானே கூட பரவாயில்லை.. அடுத்த டெஸ்ட் கேப்டன் யார்? இந்த 3 பேருக்கு வாய்ப்பு கொடுங்க- கவாஸ்கர்

மும்பை : இந்திய டெஸ்ட் அணியில் ரோகித் சர்மாவுக்கு பிறகு அடுத்த கேப்டன் யார் என்று கவாஸ்கர் கேள்வி எழுப்பி உள்ளார். ரோகித் சர்மாவுக்கு தற்போது 36 வயதாகிவிட்டது.

ஏற்கனவே அவர் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என அனைத்திலும் கேப்டனாக விளங்குகிறார். தற்போது டி20 யில் சிறிது காலம் விளையாடாமல் ரோகித் சர்மா தவிர்த்து வருகிறார்.

Sunil Gavaskar advices selectors to pick next vice captain for test team

இதனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவுக்கு பெரிய அளவில் எதிர்காலம் இருக்காது என தெரிகிறது. அதிகபட்சமாக அவர் இரண்டு ஆண்டுகள் வரை கேப்டனாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் தோல்வியை தழுவியது.

இதனால் அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதனால் அடுத்த கேப்டனை தேர்வு செய்வதில் தேர்வு குழு முடிவு எடுத்துள்ளது. அதன்படி அனுபவமிக்க ரஹானே துணை கேப்டனாக மீண்டும் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே அந்த பொறுப்பில் ரஹானே தான் இருந்தார்.

பிறகு அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து கே எல் ராகுல், பும்ரா, ரிஷப் பந்த் என துணை கேப்டன் மாறி மாறி வந்து தற்போது மீண்டும் அது ரஹானே கைக்கு சென்று விட்டது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள சுனில் கவாஸ்கர், இந்தியாவின் அடுத்த கேப்டன் யார் என்று கேள்விக்கு பதில் தேட வேண்டும். ரஹானே தற்போது துணை கேப்டனாக இருக்கிறார். அதில் எந்த ஒரு தவறும் இல்லை.

Sunil Gavaskar advices selectors to pick next vice captain for test team

ஆனால் அடுத்த இளம் வீரரை கேப்டனாக தாம் தயார் செய்யும் வாய்ப்பு பறிபோய்விட்டது. குறைந்தபட்சம் இப்போதே சில வீரரிடம் நீங்கள் கூறுங்கள். அடுத்த கேப்டனாக உன்னை தான் நாங்கள் தேர்வு செய்வோம். தயாராக இரு என்று இப்போதே கூறி விடுங்கள். எனவே அவர் தன்னைத்தானே தயார் படுத்திக் கொள்வார்.

என்னைக் கேட்டால் தற்போது கில், அக்சர் பட்டேல் ஆகிய இருவரையும் துணைக் கேப்டனாக நியமிக்கலாம். அக்சர் பட்டேல் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்படுகிறார். ஒவ்வொரு போட்டியிலும் அவர் மெறுகேறி வருகிறார். இதனால் துணைக் கேப்டனாக அவருக்கு பொறுப்பு வழங்கலாம். இதேபோன்று சுப்மன் கில்லும் நன்றாக விளையாடி வருகிறார். இஷான் கிஷனையும் நாம் சரி வர விளையாட மாட்டார் என்று விலக்கி வைத்து விட முடியாது என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, June 26, 2023, 12:18 [IST]
Other articles published on Jun 26, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+