9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் லயன்ஸை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அபார வெற்றி!
ஹைதராபாத்: 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கோடு களமிறங்கிய சன்ரைசர்சஸ் அணி ஒரே ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் லயன்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது.
ஹைதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் குஜராத் லயன்ஸ் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதைத்தொடர்ந்து குஜராத் லயன்ஸ் அணி பேட்டிங் செய்தது. சன்ரைசர்ஸின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்திருந்தது.
இதையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கோடு களமிறங்கிய நடப்பு சாம்பயின் சன்ரைசர்ஸ் 3.1 ஓவரில் தவான் விக்கெட்டை பறிகொடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய ஹென்ரிக்ஸ் கேப்டன் டேவிட் வார்னருடன் தனது கூட்டணியை வலுப்படுத்தினார். கடைசி வரை அந்த கூட்டணியை பிரிக்க முடியாமல் குஜராத் லயன்ஸ் பவுலர்கள் போராடினார்.
ஆனால் 15.3 ஒவரில் 140 ரன்களை அடித்து குஜராத் லயன்ஸை வீழ்த்தி சன்ரைசர்ஸ் அணி வெற்றியை தக்க வைத்துக்கொண்டது. அந்த அணியில் அதிகளவாக கேப்டன் டேவிட் வார்னர் 45 பந்துகளுக்கு 76 ரன்களும் ஹென்ரிக்ஸ் 39 பந்துகளுக்கு 52 ரன்களும் எடுத்திருந்தனர். நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் பெறும் இரண்டாவது வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications