Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெற்றி பெற்றாலும்,எனக்கு வருத்தம் தான்..நான் அந்த தவறை திரும்பவும் செய்துவிட்டேன்..சூர்யகுமார் வேதனை

மொஹாலி : இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் சூரியகுமார் யாதவ் நடப்பாண்டில். மோசமான பார்ம் காரணமாக தடுமாறினார். குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தொடர்ந்து மூன்று முறை கோல்டன் டக் ஆகி சோகமான சாதனைகள் படைத்தார்.

ஐபிஎல் தொடரிலும் ஆரம்ப கட்டத்தில் தடுமாறிய சூரிய குமார் யாதவ் தற்போது தன்னுடைய பழைய ஆட்டத்தை மீட்டெடுத்துள்ளார். ராஜஸ்தானுக்கு எதிராகவும் தற்போது பஞ்சாப் அணிக்கு எதிராகவும் சூரியகுமார் யாவும் அதிரடி அரை சதங்களை விளாசி மும்பை அணியை வெற்றி பெற வைத்துள்ளார்.

Suryakumar yadav feels he need to finish the game by getting not out

ஆனால் இன்றைய ஆட்டத்தில் தான் ஒரு தவறு செய்து விட்டதாக சூரியகுமார் யாதவ் கூறினார். இது குறித்து பேசிய அவர், இன்று நாங்கள் வெற்றி பெற்றதை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தாலும்,எனக்கு ஒரு குறை இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் நான்தான் கடைசி வரை பேட்டிங்கில் நின்று சேசிங்கை முடித்திருக்க வேண்டும்.

கடந்த ஆட்டத்திலும் இதைத் தவறை நான் செய்து விட்டேன். சேசிங் செய்யும் போது அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று எங்களுக்கு தெரியும். நான் இன்று பெரியதாக ஏதும் விளையாடவில்லை. இஷான் கிஷன் நன்றாக விளையாடிக் கொண்டிருந்தார். அவருக்கு துணையாக மட்டும்தான் நின்றேன்.இது போன்ற சூழலுக்காக நான் என்னையே தயார் படுத்திக் கொண்டிருந்தேன்.

Suryakumar yadav feels he need to finish the game by getting not out

ஒரு ஓவரில் 12 முதல் 14 ரன்கள் அடித்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்ற பட்சத்தில் எந்த ஷாட்டுகளை ஆடலாம் என்பது குறித்து யோசிப்பேன். இன்றைய ஆட்டத்தில் நானும் இஷாந்த் கிஷனும் எங்களுடைய பணியை மாற்றிக் கொண்டோம்.எனக்கு இசான் கிஷனை போல் பவராக விளையாடி ரன் சேர்க்கத் தெரியாது. நான் டைமிங்கை நம்பி தான் ஷாட் அடிப்பேன். இதைப் போன்று பில்டர்கள் இல்லாத இடத்தை பார்த்து ரன் சேர்ப்பேன். எங்களுடைய பார்ட்னர்ஷிப் அணியின் வெற்றியை தேடி தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று சூரியகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, May 4, 2023, 0:14 [IST]
Other articles published on May 4, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+