Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதலில் பேட்டிங் செய்தாலும் சேஸிங் மனநிலையில் விளையாடினோம்.. சதம் குறித்து சூர்யகுமார் பேச்சு

மும்பை : சர்வதேச t20 கிரிக்கெட்டில் மூன்று சதங்களை அடித்திருக்கும் சூரிய குமார் யாதவ் தற்போது தான் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக மூன்று இலக்க ரன்களை தொட்டிருக்கிறார்.

49 பந்துகளை எதிர்கொண்ட சூரிய குமார் யாதவ், 103 ரன்களை விளாசினார்.இதில் ஆறு சிக்ஸர்களும் 11 பவுண்டர்களும் அடங்கும்.
இந்த நிலையில் ஆட்ட நாயகன் விருது வென்ற பிறகு பேசிய சூரிய குமார் யாதவ் இது என்னுடைய சிறந்த டி20 இன்னிங்ஸ் என்று கூட கூறலாம்.

Suryakumar yadav opens up about his batting technique and mindset vs GT

இதில் மிகவும் முக்கியம் என்னவென்றால் நாங்கள் முதலில் பேட்டிங் செய்தோம். ஆட்டத்திற்கு முன்பு நாங்கள் நடத்திய ஆலோசனையில் முதலில் பேட்டிங் செய்தாலும் சேசிங் செய்யும் போது என்ன மனநிலையில் விளையாடுவோமோ அதே போல் 200-220 ரன்களை குவிக்க வேண்டும் என்று உத்வேகத்தில் விளையாட வேண்டும் என்று முடிவு எடுத்தோம்.

நாங்கள் விளையாடும் போது ஏழு, எட்டு ஓவர்கள் பிறகு பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. மைதானத்தில் ஒரு பக்கம் 75 முதல் 80 மீட்டர் தூரம் பவுண்டரி அளவு இருந்தது. எனவே நான் Third men திசை அல்லது square leg திசையில் அடித்து ரன்கள் சேர்க்க வேண்டும் என என்னை நானே தயார் படுத்திக் கொண்டேன். நேராக அடித்து விளையாடுவது குறித்து நான் யோசிக்கவில்லை. 360 டிகிரி கோணத்திலும் ஷாட் ஆடி ரன்கள் சேர்க்க வேண்டும் என்றால் அதற்கு நிறைய பயிற்சி தேவை.

அப்போதுதான் களத்திற்கு வரும்போது உங்கள் மனநிலை தெளிவாக இருக்கும். உங்களால் ரன் சேர்க்க முடியும். நான் ரன்கள் சேர்க்க வேண்டும் என்று விளையாடுவதில்லை. அணியின் வெற்றி தான் எனக்கு மிகவும் முக்கியம் என்று சூரியகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். இந்தப் போட்டியின் மூலம் குஜராத்தை இரண்டு முறை சேசிங் செய்யவிடாமல் தடுத்த அணி என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றது.

Story first published: Saturday, May 13, 2023, 5:58 [IST]
Other articles published on May 13, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+