
57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையில் அபுதாபியில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 57 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி கொண்டுள்ளது. முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்களை அடித்து அதகளம் செய்தது.

47 பந்துகளில் 79 ரன்கள்
அணியின் துவக்க வீரராக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், 47 பந்துகளில் 79 ரன்களை அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து பார்ட்னர்ஷிப்பில் கலக்கி ஆட்டம் முடிவு வரையிலும் இருந்து ரன்களை குவித்து தன்னுடைய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்ததோடு, ஆட்ட நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ரோகித் சர்மா பாராட்டு
இந்நிலையில் சூர்யகுமார் யாதவ் மீண்டும் பார்மிற்கு வந்துள்ளதாகவும், அவர் தேர்வு செய்த ஷாட்கள் மிகவும் அலாதியானவை என்றும் கேப்டன் ரோகித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் இறுதி வரை இதேபோன்ற விளையாட்டை அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மீண்டும் முதலிடம்
மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து மூன்று வெற்றிகளை பெற்றுள்ளது. மேலும் இந்த வெற்றி மூலம் ஐபிஎல் பட்டியலில் முதலிடத்திற்கு மீண்டும் முன்னேறியுள்ளது. ,இந்நிலையில் அணி வீரர்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் விளையாடி வருவதாகவும் ரோகித் சர்மா மேலும் கூறினார்.

சூர்யகுமார் சிறப்பு
இதனிடையே, கடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாட முடியாத நிலையில், இந்த போட்டியில் இறுதிவரை நின்று ஆட வேண்டும் என்று தான் கருதியதாகவும் அதை செயல்படுத்தியதாகவும் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். மேலும் லாக் டவுன் காலத்தில் தான் தன்னுடைய ஆட்டத்தை மேலும் சிறப்பாக்கிக் கொண்டதாகவும் அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications