Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணிக்கு மீண்டும் அடி.. அதிரடி பேட்ஸ்மேனுக்கு உடல்நிலை சரியில்லை.. சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு?

மும்பை: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரை வெற்றியுடன் தொடங்கியிருந்தாலும், இந்திய அணிக்கு அடுத்தடுத்து சோதனைகள் வந்துகொண்டே இருக்கின்றன. அணியின் அதிரடித் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா, கடுமையான காய்ச்சல் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வருவது தற்போது தெரியவந்துள்ளது. இதனால் அடுத்த போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா, அமெரிக்கா அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. வெற்றி மகிழ்ச்சியை அளித்தாலும், வீரர்களின் உடல்நிலை குறித்த செய்திகள் ரசிகர்களைக் கவலையடையச் செய்துள்ளன.

T20 World Cup 2026 India vs Namibia Sanju Samson May Replace Sick Abhishek Sharma for Delhi Clash

காய்ச்சலுடன் ஆடிய அபிஷேக் சர்மா

அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் தொடக்க வீரராகக் களமிறங்கிய அபிஷேக் சர்மா, தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் டக்-அவுட் ஆனதற்குக் காரணம் அவரது உடல்நிலைதான் என்று கூறப்படுகிறது. போட்டி முடிந்த பிறகு இது குறித்துப் பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், "அபிஷேக் சர்மா காய்ச்சலுடன்தான் பேட்டிங் செய்ய வந்தார்" என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.

காய்ச்சல் மட்டுமல்லாமல், அவருக்குத் தீவிரமான வயிற்றுப் பிரச்சனையும் இருந்துள்ளது. இதனால்தான் பேட்டிங் செய்து முடித்த பிறகு, இரண்டாவது பாதியில் இந்திய அணி பந்துவீசியபோது அவர் பீல்டிங் செய்ய மைதானத்திற்கு வரவில்லை. டிரெஸ்ஸிங் ரூமிலேயே அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவருக்குப் பதிலாகப் பீல்டிங் பயிற்சியாளர் டி.திலிப் டிரிங்க்ஸ் கொண்டு வரும் பணிகளைக் கவனித்தார்.

சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு?

இந்திய அணி தனது அடுத்த போட்டியில் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி நமீபியா அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதற்குள் அபிஷேக் சர்மா முழுமையாகக் குணமடையவில்லை என்றால், அவருக்குப் பதிலாகச் சஞ்சு சாம்சன் அல்லது வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

தற்போது அபிஷேக் சர்மாவின் உடல்நிலை மற்றும் சஞ்சு சாம்சனின் அனுபவம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, சஞ்சு மீண்டும் ஆடும் லெவனுக்குள் வர வாய்ப்பு உருவாகியுள்ளது. இஷான் கிஷனுக்காக சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டு இருந்தார்.

பும்ரா மற்றும் வாஷிங்டன் சுந்தர் அப்டேட்

ஜஸ்பிரித் பும்ரா: வைரல் காய்ச்சல் காரணமாக முதல் போட்டியில் விளையாடாத பும்ரா, தற்போது குணமடைந்து வருகிறார். அவர் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் களமிறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

வாஷிங்டன் சுந்தர்: காயத்திலிருந்து மீண்டுள்ள இவர், பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியிலிருந்து நேரடியாக டெல்லி சென்று இந்திய அணியுடன் இணைவார் என்று கேப்டன் சூர்யகுமார் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஏற்கனவே ஹர்ஷித் ரானா காயத்தால் தொடரிலிருந்து வெளியேறிய நிலையில் அவருக்குப் பதில் முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். இப்போது அபிஷேக் சர்மாவுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பது இந்திய அணி நிர்வாகத்திற்குச் சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Sunday, February 8, 2026, 16:17 [IST]
Other articles published on Feb 8, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+