Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

PAK vs NED: "ஒரே மேட்ச்சில் பாகிஸ்தானை வீட்டுக்கு அனுப்பி இருப்போம் ஆனா.." நெதர்லாந்து வீரர் மீகெரன்

கொழும்பு: டி20 உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறவில்லை என்றும், இந்தப் போட்டியில் வென்று இருந்தால் பாகிஸ்தான் அணியை வீட்டுக்கே அனுப்பி இருக்கலாம் என்றும் நெதர்லாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் பால் வான் மீகெரன் வேதனை தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணியை வீட்டுக்கு அனுப்பக் கிடைத்த பொன்னான வாய்ப்பை நழுவ விட்டுவிட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற குரூப் ஏ பிரிவு ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி நெதர்லாந்து அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கடைசி வரை பரபரப்பாகச் சென்ற இந்த ஆட்டம் குறித்துப் போட்டி முடிந்த பிறகு வான் மீகெரன் செய்தியாளர்களிடம் பேசினார்.

T20 World Cup 2026 PAK vs NED Paul van Meekeren Says Netherlands Gifted Victory to Pakistan

நாங்க தான் பெஸ்ட் டீம்

தோல்வி குறித்துப் பேசிய அவர், "நான் தெளிவாகச் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெறவில்லை. நாங்கள்தான் எங்களுக்கே எதிராக விளையாடித் தோற்றுவிட்டோம். இன்றைய போட்டியில் பாகிஸ்தானை விட நாங்கள்தான் சிறந்த அணியாகச் செயல்பட்டோம். குறிப்பாகப் பந்துவீச்சில் நாங்கள் ஆதிக்கம் செலுத்தினோம். வெற்றி எங்களுக்குத்தான் கிடைத்திருக்க வேண்டும்" என்று கூறினார்.

பாகிஸ்தானை விரட்டியிருக்கலாம்

மேலும் அவர் பேசுகையில், "இந்தப் போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டியது. அப்படி நடந்திருந்தால், பாகிஸ்தான் அணியை இத்தொடரிலிருந்தே வீட்டுக்கு அனுப்பியிருக்கலாம். ஆனால், அது நடக்காமல் போனது வெட்கக்கேடானது. இருப்பினும் நடந்து முடிந்துவிட்டது, அதை மாற்ற முடியாது" என்று ஆதங்கப்பட்டார்.

ஏற்கனவே இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் பாகிஸ்தான் புறக்கணிப்பதாக அறிவித்துள்ள சூழலில், நெதர்லாந்திடமும் தோற்றிருந்தால் அந்த அணி முதல் சுற்றோடு வெளியேறும் நிலை ஏற்பட்டிருக்கும். அதைத்தான் வான் மீகெரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கையில் இருந்த வெற்றி

148 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் அணி, ஒரு கட்டத்தில் 90 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது. ஆனால், வான் மீகெரன் மற்றும் நெதர்லாந்து பந்துவீச்சாளர்களின் துல்லியமான தாக்குதலால், பாகிஸ்தான் அணி 114 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

வெற்றி நெதர்லாந்து பக்கம் இருந்தபோது, கடைசி நேரத்தில் பஹிம் அஷ்ரஃப் அதிரடியாக விளையாடி பாகிஸ்தானைக் காப்பாற்றினார். நெதர்லாந்து வீரர்கள் சில முக்கியமான கேட்சுகளை விட்டதும், கடைசி நேரத்தில் பதற்றமடைந்ததும் தோல்விக்குக் காரணமாக அமைந்தது.

"எங்கள் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். பாகிஸ்தான் அணி வலுவான நிலையில் இருந்தபோதும், நாங்கள் விடாமல் போராடினோம். அதுவே எங்கள் அணியின் கலாச்சாரம். அடுத்த போட்டியில் நமீபியாவை வீழ்த்தி மீண்டு வருவோம்" என்று வான் மீகெரன் நம்பிக்கையுடன் தெரிவித்தார். இந்தப் போட்டியில் அவர் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, February 8, 2026, 9:36 [IST]
Other articles published on Feb 8, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+