Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக்கோப்பை ஜெயிக்கப் போவது இந்தியா, ஆஸ்திரேலியா இல்லை.. இந்த அணிக்குத் தான் சான்ஸ் - அஸ்வின்

சென்னை: 2026 டி20 உலகக்கோப்பாைத் தொடர் தொடங்கவுள்ள நிலையில், பலரும் இந்தியா அல்லது ஆஸ்திரேலியாதான் கோப்பையை வெல்லும் எனத் தங்களது கணிப்புகளைக் கூறி வருகின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஆஸ்திரேலியாவை விட நியூசிலாந்து அணிக்குத்தான் இந்த முறை அதிக வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தனது யூடியூப் சேனலில் உலகக்கோப்பை குறித்துப் பேசிய அஸ்வின், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளின் தற்போதைய நிலையை ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.

T20 World Cup 2026 Ravichandran Ashwin Predicts New Zealand as Title Contender Over India and Australia

நியூசிலாந்தின் பலம் என்ன?

சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை நியூசிலாந்து அணி 1-4 என்ற கணக்கில் இழந்தது. இது குறித்துப் பேசிய அஸ்வின், "நியூசிலாந்து அணி இந்தியாவிடம் தொடரை இழந்திருக்கலாம். ஆனால், அந்தத் தோல்வியிலிருந்து அவர்கள் நிறைய பாடங்களைக் கற்றுக்கொண்டிருப்பார்கள். இந்திய மைதானங்களின் தன்மை அவர்களுக்கு இப்போது நன்றாகப் புரிந்திருக்கும்" என்று கூறினார்.

மேலும், "உலகக்கோப்பை போன்ற ஐசிசி தொடர்களில் எப்போதுமே நியூசிலாந்து அணி இந்தியாவுக்குப் பெரும் தலைவலியாக இருந்துள்ளது. அவர்கள் எதிரணிக்கான திட்டங்களை மிகச் சரியாக வகுப்பார்கள். ஆடம் மில்னே, மைக்கேல் பிரேஸ்வெல் போன்ற வீரர்கள் காயத்தால் விலகியிருந்தாலும், ஒரு அணியாக நியூசிலாந்து ஆபத்தானது" என்று அஸ்வின் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவுக்குச் சிக்கல்

அதே சமயம் ஆஸ்திரேலிய அணியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அஸ்வின் சுட்டிக்காட்டினார். பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை 0-3 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முழுமையாக இழந்ததை அவர் நினைவு கூர்ந்தார்.

"மிட்செல் ஸ்டார்க் ஓய்வு பெற்றுவிட்டார். பேட் கம்மின்ஸ் காயத்தால் விலகிவிட்டார். தற்போது ஆஸ்திரேலிய அணியில் ஆடம் ஜம்பா மற்றும் மேத்யூ குனேமன் என இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமே உள்ளனர். ஒருவேளை ஆடம் ஜம்பாவுக்குக் காயம் ஏற்பட்டால், அந்த அணியின் சுழற்பந்து வீச்சு என்னவாகும்? கிளென் மேக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட் போன்ற பகுதிநேர பந்துவீச்சாளர்களை நம்பியே அவர்கள் உள்ளனர்" என்று அஸ்வின் விமர்சனம் செய்துள்ளார்.

அஸ்வின் கணிப்பு

"கடந்த உலகக்கோப்பையிலும் ஆஸ்திரேலியா சிறப்பாகச் செயல்படவில்லை. எனவே, தற்போதைய சூழலில் ஆஸ்திரேலியாவை விட நியூசிலாந்து அணிதான் சிறந்த நிலையில் உள்ளது. ஆஸ்திரேலியாவை விட நியூசிலாந்துக்குத்தான் இந்த உலகக்கோப்பையில் சாதிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது" என்று அஸ்வின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற சவால் அளிக்கும் அணிகள் இடம்பெற்றுள்ள கடினமான பிரிவில் நியூசிலாந்து அணி இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, February 6, 2026, 14:03 [IST]
Other articles published on Feb 6, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+