Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவை வீழ்த்தாமல் உலகக்கோப்பையை வெல்ல முடியாது.. வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் டேரன் சமி ஓபன் டாக்

மும்பை: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரை நடத்தும் இந்திய அணி குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேரன் சமி மிக முக்கியமான கருத்தைத் தெரிவித்துள்ளார். "இந்திய அணியை வீழ்த்தாமல் எந்த ஒரு அணியாலும் உலகக்கோப்பையை வெல்ல முடியாது" என்று அவர் பேசி இருப்பது கவனம் பெற்றுள்ளது.

ஒரு காலத்தில் டி20 கிரிக்கெட்டில் ராஜாவாகத் திகழ்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, தற்போது தனது பழைய பெருமையை மீட்கப் போராடி வருகிறது. இந்நிலையில், அந்த அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பயிற்சியாளருமான டேரன் சமி, இத்தொடர் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

T20 World Cup 2026 West Indies coach Daren Sammy says No Team Can Win Without Beating India

இந்தியாதான் பெரிய தடைக்கல்

டேரன் சமி கூறுகையில், "இந்த உலகக்கோப்பையை எந்த அணி வெல்ல நினைத்தாலும், அவர்கள் முதலில் இந்திய அணியைத் தாண்டியாக வேண்டும். இந்தியாவை வீழ்த்தாமல் எந்த அணியாலும் கோப்பையை வெல்ல முடியாது என்பதுதான் நிதர்சனம்.

அது நாக்-அவுட் சுற்றாக இருக்கலாம், அரையிறுதி அல்லது இறுதிப்போட்டியாகக் கூட இருக்கலாம். சொந்த மண்ணில் இந்திய அணி அசுர பலத்துடன் உள்ளது. அவர்கள் பயமில்லாத கிரிக்கெட்டை விளையாடி வருகிறார்கள். அவர்களைச் சமாளிப்பது எதிரணிகளுக்குக் கடினமான காரியம்" என்று எச்சரித்தார்.

2016 நினைவுகள்

பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் நடந்த உலகக்கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அப்போது இந்தியாவை அரையிறுதியில் வீழ்த்தியது குறித்தும் சமி நினைவுகூர்ந்தார்.

"2016ஆம் ஆண்டும் இதே நிலைமைதான் இருந்தது. மும்பையில் நடந்த அரையிறுதிக்கு முன்பு, இது 'டேவிட் மற்றும் கோலியாத்' (சிறியவன் - பெரியவன்) மோதல் என்று பத்திரிகையாளர்களிடம் சொன்னேன். யாரும் நாங்கள் ஜெயிப்போம் என்று நம்பவில்லை. ஆனால் நாங்கள் அன்று 193 ரன்களை விரட்டி இந்தியாவை வீழ்த்தினோம். அப்போதும் 'கோப்பை வெல்ல வேண்டுமென்றால் இந்தியாவைத் தாண்ட வேண்டும்' என்றே நாங்கள் பேசிக்கொண்டோம். அந்த விதி இப்போதும் மாறவில்லை" என்றார்.

வீரர்கள் மீது நம்பிக்கை

சமீபத்தில் தென்னாப்பிரிக்காவிடம் தோற்றிருந்தாலும், தமது அணியின் மீது நம்பிக்கை இருப்பதாகச் சமி தெரிவித்தார். "சமீபத்திய முடிவுகள் எங்களுக்குச் சாதகமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், என் வீரர்களின் கண்களில் ஒரு வெறியைப் பார்க்கிறேன். எங்களால் கோப்பையை வெல்ல முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். நம்பிக்கை இல்லாமல் நாங்கள் இங்கே வந்திருக்க மாட்டோம்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டுக்கு என்று ஒரு பெரிய வரலாறு உள்ளது. 70களின் ஆதிக்கம் முதல் 2012, 2016 வெற்றிகள் வரை பல கதைகள் உள்ளன. இந்த அணியும் தமக்கான ஒரு வரலாற்றை உருவாக்கும்" என்று நம்பிக்கையுடன் பேசினார்.

2026 டி20 உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் போட்டியில் ஸ்காட்லாந்து அணியை எதிர்கொள்கிறது. முதல் போட்டியில் இருந்தே பெரிய வெற்றியுடன் தொடங்க திட்டமிட்டுள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி.

Story first published: Saturday, February 7, 2026, 10:37 [IST]
Other articles published on Feb 7, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+