
அக்டோபர் 17 முதல்
அக்டோபர் 17 முதல் தொடங்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடர் நவம்பர் 14ம் தேதி முடிவடைகிறது. போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் (தகுதி சுற்று மட்டும்) நடைபெறுகிறது. முதல் சுற்றில் மொத்தம் 12 போட்டிகள் நடத்தப்பட உள்ளது. போட்டிகள் அனைத்தும் அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறும். இதில் வங்கதேசம், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன், பாப்புவா நியூ கினியா ஆகிய 8 அணிகள் இரு குழுக்களாக பிரிந்து மோதுகின்றன. இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெறும்.

இந்தியா vs பாகிஸ்தான்
குரூப் 1-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், வின்னர் குரூப் ஏ, ரன்னர் குரூப் பி ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. அதேபோல், குரூப் 2-ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ரன்னர் குரூப் ஏ, வின்னர் குரூப் பி ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இதில், இந்திய அணி வரும் அக்டோபர் 24ம் தேதி துபாயில் நடைபெறும் ஆட்டத்தில், மாலை 6 மணிக்கு பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்திய அணி முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொள்வது இத்தொடரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிறகு பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியையும் இந்தியா எதிர்கொள்கிறது.

15 வீரர்கள் யார்?
இந்நிலையில், இன்னும் ஒரு வாரத்திற்குள் உலகக் கோப்பைக்கான இந்திய அணி பட்டியல் வெளியாகும் என்று பிரபல விளையாட்டுப் பிரிவு ஊடகவியலாளர் போரியா மஜூம்தார் ட்வீட் செய்துள்ளார். இதனால், விரைவில் இந்திய அணி லிஸ்ட் வெளியாகும் என்று தெரிகிறது. ஆனால், அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்பதே பெரும் கேள்விக்குறியாக உள்ளது. இந்திய அணியில் 15 வீரர்கள் கொண்ட பட்டியலும், 3 ரிசர்வ் வீரர்கள் கொண்ட பட்டியலும் வெளியிடப்பட உள்ளது. அணியில் இடம் பிடிக்கப் போகும் அந்த 15 வீரர்கள் யார்? அந்த 3 ரிசர்வ் வீரர்கள் யார்? என்பதே சஸ்பென்ஸாக உள்ளது.

மூன்று வீரர்கள் யார்?
1.ரோஹித் சர்மா
2.விராட் கோலி (c)
3.லோகேஷ் ராகுல்
4.சூர்யா குமார் யாதவ்
5. ரிஷப் பண்ட் (wk)
6.ஹர்திக் பாண்டியா
7.ரவீந்திர ஜடேஜா
8. தீபக் சாஹர்
9.யுவேந்திர சாஹல்
10.முகமது ஷமி
11. ஜஸ்பிரித் பும்ரா
12. வாஷிங்டன் சுந்தர்
13. இஷான் கிஷன்
14. புவனேஸ்வர் குமார்
15. ஷ்ரேயாஸ் ஐயர்
அந்த மூன்று மாற்று வீரர்களாக நடராஜன், சிராஜ், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம் பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மைக்கேல் தமிழ் நேயர்களாகிய நீங்களும் உங்கள் 15 பேர் கொண்ட அணியை கமெண்ட்ஸ் செக்ஷனில் பதிவிடலாம்.


Click it and Unblock the Notifications











