"மாறா".. மாஸ் காட்டிய மணிமாறன்.. பரோடாவிற்கு சால்னா ஊத்திய தமிழக அணி.. சையது முஷ்டாக் சாம்பியன்
சென்னை: சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் தமிழக அணி சாம்பியன் ஆகியுள்ளது. மிகவும் பரபரப்பாக சென்ற இறுதிப்போட்டில் பரோட்டாவை வீழ்த்தி தமிழக அணி வென்றுள்ளது.
Recommended Video
சையது முஸ்டாக் அலி கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 10ம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. பெங்களூர், கொல்கத்தா, சென்னை, மும்பை, வாதோரா, இந்தூர், அஹமதாபாத் ஆகியோர் நகரங்களில் இந்த போட்டிகள் நடந்தது.
லீக் ஆட்டத்தில் இருந்து இறுதி போட்டி வரை இந்த தொடர் மிகவும் சிறப்பாக அமைந்தது. அதிலும் தமிழ்நாடு அணி வரிசையாக 8 போட்டிகளில் தோல்வி அடையாமல் ஆடி அதிரடி காட்டியது.

அதிரடி
இந்த தொடரில் தொடக்கத்தில் இருந்து தமிழ்நாடு, பரோடா ஆகிய அணிகள் ஆதிக்கம் செலுத்தியது. கடந்த 22 நாட்களாக ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக சென்றது. இதில் ராஜஸ்தானை வீழ்த்தி தமிழ்நாடு அணி பைனல் சென்றது. இன்று பைனலில் பரோடாவை தமிழகம் எதிர்கொண்டது.

எப்படி
தமிழக அணி, பரோடா அணி ஆகிய இரண்டு அணிகளும் இந்த தொடரில் வரிசையாக 7 போட்டிகளில் தோல்வி அடையாமல் இன்று களமிறங்கியது. இந்த நிலையில் முதலில் பேட்டிங் இறங்கிய பரோடா அணி தொடக்கத்தில் இருந்தே திணறியது. முதலில் பேட்டிங் செய்த பரோடா அணி 20 ஓவரில் 120 ரன்கள் எடுத்தது.

ரன்கள்
இன்று தமிழக அணியில் மணிமாறன் சித்தார்த் என்ற இளம் வீரர் சேர்க்கப்பட்டார். முதல் போட்டியிலேயே இந்த தொடரில் இவர் 4 விக்கெட் எடுத்தார்.வெறும் 20 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் எடுத்து மணிமாறன் மொத்தமாக பரோடா அணியை காலி செய்தார்.

பேட்டிங்
இதன் பின் பேட்டிங் இறங்கிய தமிழக அணி பெரிய தடுமாற்றம் இல்லாமல் ஆடியது. ஹரி நிஷாந்த் 35, தினேஷ் கார்த்திக் 22 ரன்கள் எடுத்தனர். அதன்பின் பாபா அப்ரஜித் 29, ஷாருக்கான் அதிரடியாக இறங்கிய 7 பந்தில் 19 ரன்கள் எடுத்தார்.

வெற்றி
இதனால் அதிரடியாக ஆடிய தமிழக அணி சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் பரோடா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. தமிழக அணி 18 ஓவரில் 123 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 2வது முறையாக தமிழக அணி சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.


Click it and Unblock the Notifications