Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படி ஒரு ஹிட்டரை மிஸ் பண்ணிட்டோமே.. ஐபிஎல் அணிகளை திரும்பி பார்க்க வைத்த தமிழக வீரர்.. கெத்து!

சென்னை: சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் தமிழக அணிக்காக ஆடி வரும் ஷாருக்கான் பெரிய அளவில் கவனம் ஈர்த்து உள்ளார்.

2021 ஐபிஎல் தொடர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் நடந்து முடிந்த சையது முஷ்டாக் அலி கோப்பை கவனம் பெற்றுள்ளது. ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக திட்டமிட்டு இந்த தொடர் நடத்தப்பட்டு உள்ளது.

இளம் வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களை ஐபிஎல்லில் கொண்டு வரும் வகையில் இந்த தொடர் நடந்து வருகிறது. நேற்று நடந்த இறுதிப்போட்டியில் பரோடா அணியை வீழ்த்தி தமிழக அணி வெற்றிபெற்றது.

சென்னை

சென்னை

சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் தமிழக அணிக்காக ஆடி வரும் ஷாருக்கான் பெரிய அளவில் கவனம் ஈர்த்து உள்ளார். ஒவ்வொரு போட்டியிலும் சென்னை அணிக்காக சிறப்பாக ஆடி இவர் வெற்றி தேடி தந்துள்ளார். இவர் சிறப்பம்சமே சஞ்சு சாம்சன் போல முதல் பந்தில் இருந்தே அதிரடி காட்டுவது. ஆனால் சஞ்சு, பண்ட் போல விக்கெட்டை தூக்கி கொடுக்காமல் இவர் கடைசி வரை நிலைத்து ஆடுகிறார்.

அதிரடி

அதிரடி

கடைசி வரை அதிரடியாக ஆடி மேட்சை பினிஷ் செய்வது இவரின் சிறப்பம்சமாக இருக்கிறது. அதிலும் நாக் அவுட் போட்டிகளில் தமிழக அணிக்காகக் ஷாருக்கான் ஆடிய விதம் சிறப்பாக இருந்தது.காலிறுதி ஆட்டத்தில் ராஜஸ்தானுக்கு எதிராக 13 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து தமிழ்நாடு அணி வெறும் 66 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. 7 ஓவரில் 70 ரன்களை எடுக்க வேண்டும் என்ற கட்டாயத்துடன் தமிழக அணி திணறிய போது இளம் வீரர் ஷாருக்கான் களமிறங்கினார்.

அதிரடி

அதிரடி

இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கிய ஷாருக்கான் தொடக்கத்தில் இருந்தே அதிரடி காட்டினார். வெறும் 19 பந்துகளில் 40 ரன்களை எடுத்தார். 5 பவுண்டரி, 2 சிக்ஸர் என்று ஷாருக்கான் மாஸ் ஆட்டம் ஆடி உள்ளார். தமிழ்நாடு அணி தோல்வி அடைந்துவிடும் என்று நினைத்த நிலையில் 2 ஓவர்களை மீதம் வைத்து தமிழக அணியை ஷாருக்கான் வெற்றிபெற வைத்தார்.

கடைசி பவர்பிளே

கடைசி பவர்பிளே

அந்த போட்டி மட்டுமின்றி மற்ற போட்டிகளிலும் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடி தமிழக அணியை இவர் காப்பாற்றியுள்ளார். 6-7வது பேட்ஸ்மேனாக இவர் இறங்கினாலும் சரி, மிடில் ஆர்டரில் இறங்கினாலும் சரி மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார். தற்போது இந்திய டி 20 அணியில் மிடில் ஆர்டர் வலிமையாக இல்லாத நிலையில் ஷாருக்கான் அதை நிரப்ப அதிக வாய்ப்புள்ளது.

எப்படி கவனம்

எப்படி கவனம்

டிஎன்பிஎல் மூலம் கவனம் ஈர்த்த ஷாருக்கான் தற்போது ஐபிஎல் தொடரில் வாய்ப்பு பெறுவார் என்று கூறப்படுகிறது. இரண்டு சீசனாக சையது முஷ்டாக் கோப்பையில் நன்றாக ஆடினாலும் இவரை எந்த அணியும் எடுக்கவில்லை. இந்த நிலையில் இந்த முறை இவர் ஏலம் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.

கொல்கத்தா

கொல்கத்தா

கொல்கத்தா, பெங்களூர், ராஜஸ்தான் போன்ற அணிகள் இவரை குறி வைக்கும் . அதேபோல் சென்னை, ஹைதராபாத் அணிகள் இவரை குறி வைக்கவும் கூட வாய்ப்பு உள்ளது. இந்த ஐபிஎல் ஏலத்தில் ஷாருக்கான் கண்டிப்பாக கவனிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, February 1, 2021, 11:31 [IST]
Other articles published on Feb 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+