வாத்தி கம்மிங்.. மொத்த டீமும் பக்கா விஜய் ஃபேன் போல.. தினேஷ் கார்த்திக் வெளியிட்ட வீடியோ.. பின்னணி
சென்னை: சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் சிறப்பாக ஆடி தமிழக அணி வெற்றிபெற்றுள்ளது. இந்த தொடர் வெற்றிக்கு பின் தமிழக அணி வீரர்கள் வெளியிட்ட வீடியோ பெரிய வைரலாகி உள்ளது.
சையது முஸ்டாக் அலி கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 10ம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. பெங்களூர், கொல்கத்தா, சென்னை, மும்பை, வாதோரா, இந்தூர், அஹமதாபாத் ஆகிய நகரங்களில் இந்த போட்டிகள் நடந்தது.
சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் தமிழக அணி சாம்பியன் ஆகியுள்ளது. மிகவும் பரபரப்பாக சென்ற இறுதிப்போட்டில் பரோட்டாவை வீழ்த்தி தமிழக அணி வென்றுள்ளது.

இரண்டாவது முறை
தமிழக அணிக்கு இது இரண்டாவது சையது முஷ்டாக் கோப்பை வெற்றியாகும். 2007ல் முதல்முறை தமிழக அணி இந்த கோப்பையை வென்றது. அதன்பின் மீண்டும் நேற்று கோப்பையை கைப்பற்றியுள்ளது. இரண்டு முறையும் தினேஷ் கார்த்திக்தான் கேப்டனாக இருந்தார்.
தொடர் வெற்றி
இந்த தொடர் வெற்றிக்கு பின் தமிழக அணி வீரர்கள் வெளியிட்ட வீடியோ பெரிய வைரலாகி உள்ளது. அதன்படி தமிழக அணி வீரர்கள் நேற்று வெற்றிக்கு பின் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஒன்றாக நடனம் ஆடியுள்ளார். விஜய் ஆடும் அதே ஸ்டெப்பை போட்டு ஒன்றாக நடனம் ஆடியுள்ளனர் .

தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக் முன்னால் நின்று ஆட, அவருக்கு பின்னால் நின்று தமிழக அணி வீரர்கள் ஆடியது பெரிய அளவில் வைரலாகி உள்ளது. எல்லோரும் ஒரே மாதிரி விஜய் ஸ்டெப் போட்டு கவனம் ஈர்த்துள்ளனர். அதிலும் போட்டியில் வெற்றிக்கு பின் தினேஷ் கார்த்திக் கப்பு முக்கியம் பிகிலே என்று விஜய் பாணியில் டிவிட் செய்தார்.

தமிழக வீரர்
இன்னொரு பக்கம் தமிழக வீரர் சாய் கிஷோரும் கப்பு முக்கியம் பிகிலே என்று டிவிட் செய்து இருந்தார். தமிழக அணியில் காயம் காரணமாக வாய்ப்பை இழந்த வருண் சக்கரவர்த்தியும் தீவிர விஜய் ரசிகர் ஆவார். தலைவா பட போஸ்டரை இவர் கையில் கூட பச்சை குத்தி இருக்கிறார்.

விஜய் ரசிகர்கள்
தமிழக அணியில் இப்படி எல்லோரும் விஜய் ரசிகர்களாக உள்ளது பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது. அஸ்வின் கூட ரஹானேவிடம் நேற்று மாஸ்டர் படம் பார்க்கும்படி பரிந்துரைத்து இருந்தார். தமிழக அணிக்குள் நடிகர் விஜய்க்கு பெரிய அளவில் ரசிகர்படை இருப்பது போல தெரிகிறது.


Click it and Unblock the Notifications