
அரையிறுதி
இந்த தொடரில் தமிழக அணியில் இந்த முறை இடம்பிடித்த இளம் வீரர்கள் எல்லோரும் சிறப்பாக ஆடி வருகிறார்கள். ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு வீரர் அணியின் வெற்றிக்கு காரணமாக இருக்கிறார். தினேஷ் கார்த்திக் தலைமையில் தமிழக அணி இன்று அரையிறுதி ஆட்டத்தில் விளையாடியது.

எப்படி
இன்று அரையிறுதியில் ராஜஸ்தானை தமிழ்நாடு அணி எதிர்கொண்டது. இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்தியது. முக்கியமாக முதல் 10 ஓவர்களிலேயே ராஜஸ்தான் அணி 100 ரன்களுக்கும் அதிகமாக எடுத்து அதிரடி காட்டியது.

டார்கெட்
இதனால் ராஜஸ்தான் அணி 180 ரன்களை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதிலும் ராஜஸ்தான் கேப்டன் அசோக் மேனரியா அதிரடியாக 51 ரன்கள் எடுத்து ஆதிக்கம் செலுத்தினார். ஆனால் அசோக் அவுட்டான பின் ராஜஸ்தான் அணி வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது.

விக்கெட்
அதிலும் டெத் ஓவர்களில் ராஜஸ்தான் அணி ரன் எடுக்க முடியாமல் சுருண்டது. கடைசி ஓவரில் மட்டும் அந்த அணி மூன்று விக்கெட்டை இழந்தது. தமிழ்நாடு அணியில் எம் முகமது 4 விக்கெட், சாய் கிஷோர் 2 விக்கெட் எடுத்து அசத்தினார். இதனால் ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 154 ரன்கள் எடுத்தது.

எத்தனை
இதையடுத்து களமிறங்கிய தமிழ்நாடு அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்தது. ஹரி நிஷாந்த் 4 ரன்களுக்கும், பாபா அபராஜித் 2 ரன்களுக்கும் அவுட் ஆனார்கள். இதனால் தமிழ்நாடு அணி கொஞ்சம் திணறியது. ஆனால் என் ஜெகதீசன் கொஞ்சம் பொறுமையாக ஆடி 28 ரன்கள் எடுத்தார். அதன்பின் அதிரடி காட்ட தொடங்கிய அருண் கார்த்திக் அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார்.

ஜோடி
அருண் கார்த்திக் - தினேஷ் கார்த்திக் இரண்டு பேரும் ஜோடி போட்டு அதிரடியாக ஆடினார்கள். அருண் கார்த்திக் 54 பந்தில் 89 ரன்கள் எடுத்தார். இதில் 3 சிக்ஸ், 9 பவுண்டரி அடக்கம். அதேபோல் தினேஷ் கார்த்திக் 17 பந்தில் 3 பவுண்டரி அடித்து 30 ரன்கள் எடுத்தார்.

அதிரடி
இவர்களின் அதிரடி காரணமாக 18.4 ஓவரில் 158 ரன்கள் எடுத்து தமிழ்நாடு அணி வெற்றிபெற்றது. தமிழக வீரர் அருண் கார்த்திக் மிகவும் அனுபவம் மிக்க வீரர் ஆவார். 34 வயது கொண்ட இவர் இன்று தனது அனுபவத்தை செமி பைனல் போட்டியில் காட்டி உதவி உள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு அணி பைனல்ஸ் போட்டிக்கு தேர்வாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











