Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய டி 20 உலகக் கோப்பை அணியில் மாற்றம்.. பார்மில் இருந்த வீரர் நீக்கம்.. உள்ளே வந்த சிஎஸ்கே வீரர்

ஐபிஎல் 2021 தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. சிஎஸ்கே அணி ஐபிஎல் பைனலில் கொல்கத்தா அல்லது டெல்லி அணிகளை எதிர்கொள்ள இருக்கிறது.

ஐபிஎல் தொடர் முடிந்து ஒரு வாரத்திலேயே உலகக் கோப்பை டி 20 போட்டிகள் நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்பின்

ஸ்பின்

உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இந்த முறை ஸ்பின் பவுலர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. வருண் சக்ரவர்த்தி, அஸ்வின், அக்சர் பட்டேல், ஜடேஜா, ராகுல் சாகர் என்று ஸ்பின் பவுலர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அணி தேர்வு செய்யப்பட்டது.

பாஸ்ட்

பாஸ்ட்

பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி ஆகிய பாஸ்ட் பவுலர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். ஹர்திக் பாண்டிய பாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டராக எடுக்கப்பட்டார். ஆனால் ஐபிஎல் தொடர் முழுக்கவே இவர் பவுலிங் செய்யவில்லை. பேட்டிங்கும் பெரிதாக இவர் ஆடவில்லை. இதனால் இவரை நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன.

மாற்று வீரர்

மாற்று வீரர்

ஆனால் இவர் நீக்காமல் இன்னொரு பாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டராக ஷரத்துல் தாக்கூர் அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். ஸ்டான்ட் பை வீரராக இருந்த தாக்கூர் தற்போது இந்திய அணிக்குள் தேர்வாகி உள்ளார். ஆனால் ஹர்திக் பாண்டியா நீக்கப்படவில்லை. மாறாக ஸ்பின் பவுலர் அக்சர் பட்டேல் நீக்கப்பட்டுள்ளார்.

அக்சர் பட்டேல்

அக்சர் பட்டேல்

அக்சர் பட்டேல் ஐபிஎல் தொடரில் நன்றாக பவுலிங் செய்து வந்தார். ஆனாலும் ஏற்கனவே 4 ஸ்பின் பவுலர்கள் இருந்த காரணத்தால், அக்ஸரை நீக்கி விட்டு ஷரத்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டுள்ளார். அக்ஸர் பட்டேல் ஐபிஎல் 2021 தொடரில் சிறப்பாக பவுலிங் செய்தும் தூக்கப்பட்டு ஸ்டான்ட் பை வீரராக மாற்றப்பட்டுள்ளார்.

 அணி விவரம்

அணி விவரம்

இதனால் இந்திய அணியில் கோலி, ரோஹித், ராகுல், பண்ட், சூர்யா குமார் யாதவ், இஷான் கிஷான்,ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, அஸ்வின், வருண், ராகுல் சசகர், பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி, தாக்கூர் ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர். ஸ்டான்ட் பை வீரர்களாக சாகர், ஷ்ரேயாஸ், அக்சர் பட்டேல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Story first published: Wednesday, October 13, 2021, 21:56 [IST]
Other articles published on Oct 13, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+