Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பைக்காக மாஞ்சு மாஞ்சு சாமி கும்பிட்ட பாட்டி.. அம்பானி மாமியாராம்ல!

மும்பை: ஐபிஎஸ் இறுதிப் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற வேண்டும் என சாமி கும்பிட்டுக்கொண்டிருந்த பாட்டி யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் பாட்டி வேறு யாரும் இல்லையாம் மும்பை இந்தியன்ஸ் ஓனர் நீட்டா அம்பானியின் அம்மாவாம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பை இந்தியன்ஸ்- புனே அணிகள் மோதிய ஐபிஎஸ் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் புனே அணிக்கே வெற்றி என நினைத்துக் கொண்டிருந்த நிலையில் அதிரயடியாக விளையாடிய மும்பை இந்தியன்ஸ் கடைசி ஓவரில் த்ரில்லாக வெற்றியை தங்கள் வசமாக்கி கொண்டனர்.

இதன்மூலம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக கோப்பையை கைப்பற்றி ரோஹித் ஷர்மா தலைமையிலான அணி சாதனை படைத்தது.

பாட்டியின் படு சீரியஸாக பிரார்த்தனை

பாட்டியின் படு சீரியஸாக பிரார்த்தனை

கோப்பை யாருக்கு என்ற பரபரப்பான சூழ்நிலையில் விஜபி கேலரியில் அமர்ந்திருந்த ஒரு பாட்டி கண்களை மூடி கைகளை கூப்பி படு சீரியசாக சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தார். ஒவ்வொரு பந்துக்கும் ஓவர்கள் குறைய குறைய அவரின் பிரார்த்தனை தீவிரமானது.

ரசிகர்கள் ஆச்சரியம்

ரசிகர்கள் ஆச்சரியம்

ரசிகர்கள் தங்கள் அணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பிராத்திப்பது புதிதல்ல என்றாலும் பாட்டி ஒருவர் படு தீவிரமாக தனது அணிக்காக பிரார்த்தனை செய்தது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஃபோக்கஸ் செய்த கேமராக்கள்

ஃபோக்கஸ் செய்த கேமராக்கள்

கேமராக்களும் அவரை ஃபோக்கஸ் செய்ய தவறவில்லை. முடிவில் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றியை சுவைத்தது. இதையடுத்து அந்தப் பாட்டியின் பிரார்த்தனைதான் வெற்றிக்கு காரணம் என நெட்டிசன்கள் டிவிட்டரில் போட்டு வாழ்த்து பாடினர்.

அந்தப் பாட்டி யார்?

அந்தப் பாட்டி யார்?

அந்தப் பாட்டி யாருடைய உறவினர் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில் அந்தப் பாட்டி யார் என நடிகர் அபிஷேக் பச்சன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நீட்டாவோட அம்மாவாம்

அதாவது அந்தப்பாட்டி நீட்டா அம்பானியின் தாயார் என்றும் அவர் நானி(பாட்டி) என அனைவராலும் அறியப்படுவார் என தெரிவித்துள்ளார். தனது மகளின் அணிக்காக பாட்டி சாமி கும்பிட்டது வீண்போகல!

தெங்க்யூ நானி!

மும்பை இந்தியஸ் அணியும் பாட்டியின் பிரார்த்தனைக்கு நன்றி தெரிவித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகை மற்றும் நீட்டா அம்பானியின் தாய் பூர்னிமாபென் தலால் பிரார்த்தனை ஐபிஎல் கோப்பையை மீண்டும் வீட்டிற்கே கொண்டுவந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Story first published: Tuesday, May 23, 2017, 15:01 [IST]
Other articles published on May 23, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+