For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒவ்வொரு நாளும் கனவு காண்பேன்.. 21 வருட கனவு நனவாகியுள்ளது.. யஷஸ்வி ஜெய்ஷ்வால் நெகிழ்ச்சி!

மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தனது வாழ்நாள் கனவு நிறைவேறியுள்ளதாக நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

அண்மையில் முடிவடைந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 14 போட்டிகளில் விளையாடிய யஷஸ்வி ஜெய்வால் ஒரு சதம் உட்பட 625 ரன்களை விளாசி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். ஐபிஎல் தொடர் மட்டுமல்லாமல் மும்பை அணிக்காக ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர், இராணி கோப்பை, உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள், சையத் அலி முஷ்டாலி அலி தொடர் என்று அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார்.

இதனால் விரைவில் இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் 21 வயதாகும் இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எங்கு பெயர் தெரியாத இடத்தில் டென்ட் அமைத்து கிரிக்கெட் பயிற்சி பெற்ற சிறுவன், அன்றாட செலவுகளுக்காக பானி பூரி விற்ற இளைஞன், இன்று இந்திய டெஸ்ட் அணிக்காக களமிறங்கப் போவது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

This is the moment i have been dreaming all my life says Yashasvi Jaiswal about his India Call up

இதுகுறித்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் பேசுகையில், 21 வருட வாழ்க்கையில் நான் கண்ட ஒரே கனவு இதுமட்டும்தான். அது நிறைவேறியுள்ளது. ஒவ்வொரு இரவிலும் எனது படுக்கையில் இருந்து இந்திய ஜெர்சியை அணிந்து சதம் விளாசிய ரசிகர்கள் முன் கைகளை விரித்து கொண்டாடுவது போல் கனவு கண்டிருக்கிறேன். எனது வாழ்க்கையை விடவும் கிரிக்கெட்டை அதிகமாக நேசிக்கிறேன். அதற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வேன்.

எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. நான் கூட 13 பந்துகளில் அரைசதம் அடிப்பேன் என்றெல்லாம் நினைத்ததில்லை. எந்தவொரு விஷயத்தில் சாதிக்க வேண்டுமென்றாலும், தொடர்ந்து முயற்சியும் பயிற்சியும் செய்ய வேண்டும். அதனை பின்பற்றி வருகிறேன். கிரிக்கெட்டில் இன்னும் அதிகமாக கற்றுக் கொள்ள விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டதற்கு அவரின் இடதுகை ஆட்டமும் முக்கிய காரணமாகும். ஏனென்றால் இந்திய அணியில் ரிஷப் பந்த் மற்றும் ஜடேஜா மட்டுமே இடதுகை பேட்ஸ்மேன்களாக உள்ளனர்.

டாப் ஆர்டரில் ஒரு இடதுகை பேட்ஸ்மேன் கூட இல்லாததால் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். புஜாராவின் இடத்தில் ஜெய்ஸ்வால் களமிறங்க உள்ளதால், அவருக்கு கூடுதல் பொறுப்பை வழங்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது தெளிவாகிறது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் ஜெய்ஸ்வால் சிறப்பாக செயல்படுவார் என்று ரசிகர்கள் பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Friday, June 23, 2023, 22:01 [IST]
Other articles published on Jun 23, 2023
English summary
WI vs IND: Young Cricketer Yashasvi Jaiswal said, This is the Moment i have been dreaming all my all life. Want to learn more and i will do anything for Cricket.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+