மும்பை இந்தியன்ஸ் ஜெயிக்க காரணமே இந்த பாட்டிதான்!
ஹைதராபாத்: மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று எப்படி ஜெயித்தது என்பது இன்னும் கூட ஆச்சரியம்தான். அந்த பதட்டமான சூழலில் கடைசி நேர பரபரப்புகளுக்கு மத்தியில் அத்தனை பேரின் கவனத்தையும் இந்த பெண்மணி தன் பக்கம் ஈர்த்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணி ஜெயிக்குமா, ஜெயிக்காதா என்று பெரும் பதட்ட மன நிலையில் அந்த அணியின் ரசிகர்கள் இருந்தனர். அப்போது பார்வையாளர் வரிசையில் இருந்த இந்தப் பெண்மணி செய்து கொண்டிருந்த பிரார்த்தனைதான் அத்தனை பேரையும் கவர்ந்தது.
கண்களை மூடிக் கொண்டு, வாய் முனுமுனுத்தபடி கைகளைக் கூப்பியபடி தொடர்ந்து இடைவிடாமல் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். அட, இவருக்காகவாவது ஜெயிச்சிருங்கப்பா என்று கூறும் அளவுக்கு இவரது பிரார்த்தனை இருந்தது. கடைசியில் இந்த பெண்மணியின் பிரார்த்தனையும் பலித்தது, மும்பையும் ஜெயித்தது.
மொத்த போட்டியிலும் நேற்று இவர்தான் கடைசி நேரத்தில் அத்தனை பேரையும் தன் பக்கம் ஈர்த்து விட்டார்.


Click it and Unblock the Notifications