Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த மேட்ச் நியாபகம் இருக்கா? புஜாராவிற்கு குறி வைக்கும் 3 ஐபிஎல் அணிகள்.. பின்னணி காரணமே வேறு!

சென்னை: ஐபிஎல் 2020 தொடரில் வாய்ப்பு கிடைக்காமல் போன புஜாராவை 2021 ஐபிஎல் தொடரில் சில அணிகள் ஏலம் எடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

இந்திய அணியின் புதிய தூண் என்று அழைக்கப்படும் மூத்த வீரர் புஜாரா டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடி வருகிறார். இந்திய அணியின் நிரந்தர வீரராக புஜாரா உருவெடுத்துள்ளார்.

இவர் டெஸ்ட் அணியில் சிறப்பாக ஆடுவதால் டி 20 போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேபோல் ஐபிஎல் தொடரிலும் இவரை யாரும் ஏலம் எடுக்கவில்லை.

டி 20

டி 20

இந்திய டெஸ்ட் அணியில் ஆடும் ஜடேஜா, ராகுல், பண்ட், சுப்மான் கில், மயங்க் அகர்வால் போன்ற வீரர்கள் டி 20 போட்டியிலும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். முக்கியமாக ஐபிஎல் தொடரில் இவர்கள் எல்லோரும் கலக்கி வருகிறார்கள். ரஹானேவும் கூட டெல்லி அணியில் சிறப்பாக ஆடினார்.

மோசம்

மோசம்

ஆனால் புஜாரா மட்டும் ஐபிஎல் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருகிறார். முக்கியமாக இந்திய அணியின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக இருக்கும் புஜாரா இப்படி ஐபிஎல்லில் வாய்ப்பு கிடைக்காமல் கஷ்டப்படுவது விமர்சனங்களை சந்தித்துள்ளது.

எடுப்பார்

எடுப்பார்

அதிலும் கடந்த வருடம் சையது முஸ்டாக் கோப்பை போட்டியில் எல்லாம் புஜாரா சிறப்பாக ஆடினார். சவுராஷ்டிரா அணிக்காக ஆடிய புஜாரா அந்த அணிக்காக டி 20யில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். அதேபோல் 66 பந்தில் சதம் அடித்து இவர் கவனம் ஈர்த்தார்.

66 பந்தில் சதம்

66 பந்தில் சதம்

இவர் 66 பந்தில் சதம் அடித்தது பெரிய அளவில் கவனம் பெற்றது. ஆனால் அந்த சீசன் ஐபிஎல்லில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் இந்த சீசனில் புஜாராவை சில ஐபிஎல் அணிகள் ஏலம் எடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

ஏலம் எடுக்கும்

ஏலம் எடுக்கும்

கொல்கத்தா, பெங்களூர், ராஜஸ்தான் ஆகிய மூன்று அணிகளில் ஏதாவது ஒரு புஜாராவை ஏலம் எடுக்க வாய்ப்புள்ளது. ராஜஸ்தானில் மூத்த வீரர்கள் இல்லை என்பதால் இவரை அந்த அணி எடுக்க வாய்ப்புள்ளது. டி 20 பார்மட்டில் இவர் சிறப்பாக ஆட கூடியவர். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஐபிஎல் 2021 தொடரில் புஜாரா கண்டிப்பாக ஜொலிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

Story first published: Monday, January 25, 2021, 16:57 [IST]
Other articles published on Jan 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+