Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பேட்டியின் போது திடீரென கண்ணீர் விட்ட கொல்கத்தா வீரர்.. ஐபிஎல்-ல் கொரோனா அனுபவம் - வைரல் வீடியோ

நியூசிலாந்து: கொல்கத்தா வீரர் டிம் செய்ஃப்ரெட், தனது கொரோனா அனுபவங்களை கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் 2021 தொடரில் கடுமையான பயோ-பபுளையும் மீறி கொரோனா உள்ளே நுழைந்தது. இதனால் தொடர் கடந்த மே 4ம் தேதி முதல் ஒத்திவைக்கப்பட்டது.

முதலில் கொல்கத்தா வீரர் வருண் சக்கரவர்த்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. பிறகு டெல்லி, சென்னை, ஐதராபாத் என மற்ற அணி வீரர்களுக்கும் பரவி ஐபிஎல் தொடரே தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

மூன்றாவது வீரர்

மூன்றாவது வீரர்

கொல்கத்தா அணியில் வருண் சக்கரவர்த்தி முதல் ஆளாக பாதிக்கப்பட, அதே அணியில் அடுத்தடுத்து 4 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அதில் மூன்றாவது வீரராக பாதிக்கப்பட்டவர் நியூசிலாந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டிம் செய்ஃபெர்ட். கடந்த மே 8ம் தேதி இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. உடனடியாக, இவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்வாக மருத்துவக் குழு சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தது.

2 வார சிகிச்சை

2 வார சிகிச்சை

கடந்த சீசனில் கொல்கத்தா அணியில் சிறப்பாக ஆடிய டிம் செய்ஃபெர்ட், இந்தாண்டு அணியில் தக்கவைக்கப்பட்டார். எனினும் இந்த சீசனில் அவருக்கு ஒரு போட்டியில் கூட ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. பெஞ்சில் சும்மாவே உட்கார்ந்திருந்த போதும் கொரோனா தாக்கியது. எனினும் அவருக்கு கொரோனா பாதிப்பு வீரியம் பெரியளவில் இல்லை. டிம் செய்ஃப்ரெட் தற்போது குணமடைந்து நியூசிலாந்து சென்றுவிட்டார்.

கண்ணீர்

இந்நிலையில் தனது கொரோனா அனுபவங்களை கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார் டிம் செய்ஃப்ரெட். அதில் அவர், சிஎஸ்கே மேலாளர் என்னிடம் கொரோனா உறுதியானதை காண்பித்தார். எனக்கு உலகமே நின்றுவிட்டது, அடுத்து என்ன நடக்கப்போகிறது என பெரும் பயம் ஏற்பட்டது. எனக்கு ஏதோ கெட்ட விஷயம் நடக்க போகிறது என நினைத்தேன். மிகவும் மோசமான நாட்கள் அது.

மிகவும் மோசம்

மிகவும் மோசம்

நான் கொரோனாவில் இருந்து மீள்வதற்கு மெக்கெல்லம் மற்றும் ஸ்டீபன் ஃப்ளெம்மிங் முக்கிய காரணம். அவர்கள் எனது பயத்தை குறைக்க உதவினர். அதே போல சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணி நிர்வாகமும் எனக்கு எல்லாம் சரியாகிவிடும் என நம்பிக்கை கொடுத்தனர். பின்னர் என்னை வீட்டிற்கு அனுப்பவும் சிறப்பாக முயற்சித்தனர். எனக்கு முதல் சில நாட்களுக்கு மிக கடுமையானதாக இருந்தது. பின்னர் தான் நாம் நம்பிக்கையுடன் இருந்தால் எல்லாம் சரியாகிவிடும் எனபது புரிந்தது எனக்கூறியுள்ளார்.

Story first published: Tuesday, May 25, 2021, 18:23 [IST]
Other articles published on May 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+