Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டாப் 10 டெஸ்ட் பேட்ஸ்மேன்.. சச்சினுக்கு 4, கோலிக்கு 7-வது இடம் தந்த ஸ்ரீகாந்த்.. முதலிடம் யாருக்கு?

சென்னை: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் தலைசிறந்த 10 பேட்ஸ்மேன்களைத் தேர்வு செய்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வரிசைப்படுத்தியுள்ளார். இதில் நட்சத்திர வீரர் விராட் கோலியை 7-வது இடத்திற்குத் தள்ளி, ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு 4-வது இடத்தை அளித்துள்ளார். இந்த பட்டியல் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் காரசாரமான விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முகத்தை மறைத்து வீரர்களை வரிசைப்படுத்தும் சவாலை ஸ்ரீகாந்த் நடத்தினார். இதில் ஆஸ்திரேலியாவின் மாபெரும் ஜாம்பவான் டான் பிராட்மேனுக்கு அவர் முதலிடம் அளித்துள்ளார். பிராட்மேன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 99.94 என்ற நம்ப முடியாத பேட்டிங் சராசரியுடன் 29 சதங்களை விளாசியவர். இவருக்கு அடுத்தபடியாக வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான்களான கார்பீல்ட் சோபர்ஸுக்கு 2-வது இடமும், விவ் ரிச்சர்ட்ஸுக்கு 3-வது இடமும் கிடைத்துள்ளன.

Top 10 Test Batters Krishnamachari Srikkanth Places Virat Kohli 7th and Sachin Tendulkar 4th

டெஸ்ட் அரங்கில் 15,921 ரன்கள் மற்றும் 51 சதங்கள் குவித்து அதிக ரன் மற்றும் அதிக சதம் அடித்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் சச்சின் டெண்டுல்கரை ஸ்ரீகாந்த் 4-வது இடத்தில் வைத்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் 5-வது இடத்தைப் பிடித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் ஆட்டமிழக்காமல் 400 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸின் பிரையன் லாரா 6-வது இடத்தில் உள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 9,230 ரன்களும் 30 சதங்களும் அடித்துள்ள இந்தியாவின் விராட் கோலிக்கு 7-வது இடத்தை வழங்கி ஸ்ரீகாந்த் அதிர்ச்சி கொடுத்துள்ளார். விராட் கோலி தனது கடைசி சில ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வில் ஃபார்ம் இழந்து தவித்ததும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

"வேகமும் இல்லை, உயிரும் இல்லை".. கம்பேக் கொடுத்த புவனேஷ்வர் குமாரை விளாசித் தள்ளிய ஸ்ரீகாந்த்

இந்த வரிசையில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன்களான கிரெக் சேப்பல் 8-வது இடத்திலும், 13,378 ரன்கள் குவித்த ரிக்கி பாண்டிங் 9-வது இடத்திலும் உள்ளனர். தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வரும் இங்கிலாந்தின் ஜோ ரூட்டுக்கு 10-வது இடம் கிடைத்துள்ளது. வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த ஜாம்பவான்கள் இடம்பெற்றுள்ள இந்த பட்டியல் தற்போது இணையத்தில் பரவி விவாதங்களை கிளப்பி உள்ளது.

Story first published: Friday, October 30, 2026, 9:33 [IST]
Other articles published on Oct 30, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+