Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீண்டும் உம்ரான் மாலிக்கிற்கு செய்யப்படும் துரோகம்.. நியூசி.யிடம் அடிவாங்கியதற்கு காரணமே இது தான்

ராய்ப்பூர் : நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை நோக்கி சென்றதுக்கு காரணமே ரோகித் செய்த ஒரு தவறு தான் என்று தற்போது தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

350 ரன்கள் என்ற இலக்கை எதிர்கொண்ட நியூசிலாந்து அணி 131 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில், அதன் பிறகு பார்ட்னர்ஷிப் அமைத்து பிராஸ்வெல், மிட்செல் ஜோடி நியூசிலாந்து அணியை சரிவிலிருந்து மீட்டது.

இந்த ஜோடியை வீழ்த்த கூடிய ஒரு வேகப்பந்துவீச்சாளர் அணியில் இல்லை. ஆம் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்திய உம்ரான் மாலிக் என்ன காரணத்திற்காக நீக்கப்பட்டார் என்று தெரியவில்லை.

145 கிமீ வேகம்

145 கிமீ வேகம்

வேகப்பந்துவீச்சு எடுப்படாத இந்த மைதானத்தில் நீங்கள் 120, 130 கிமீ வேகத்தில் பந்தவீசினால், நியூசிலாந்தை சேர்ந்த பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தை பந்தை பவுண்டரிக்கு அடித்து விடுவார்கள். அதுவே நீங்கள் 145 கிமீ வேகத்திற்கு மேல் வீசினால், அந்த பந்தை எதிர்கொள்ள நிச்சயம் சிரமப்பட்டு இருப்பார்கள்.

நெருக்கடி

நெருக்கடி

இலங்கைக்கு எதிரான தொடரில் கூட உம்ரான் மாலிக் ரன்களை விட்டு கொடுத்தாலும் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி கொடுத்தார். இதனால் தான் இலங்கை அணி அதிரடியாக ஆட நினைத்த போது எல்லாம் உம்ரான் மாலிக் விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர்ந்து நெருக்கடி கொடுத்தார்.

12 விக்கெட்டுகள்

12 விக்கெட்டுகள்

ஆனால், நேற்றைய ஆட்டத்தில் மைக்கேல் பிராஸ்வெல் அதிரடியாக விளையாடி இந்திய வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்த போது பதிலடி தரும் வகையில் பும்ராவோ, உம்ரான் மாலிக்கோ இல்லாதது தான் நேற்று இந்தியா தோல்வியின் விழும்பு வரை செல்ல காரணமாக அமைந்தது. 7 ஒருநாள் போட்டியில் வியைடி உம்ரான் மாலிக் 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ரசிகர்கள் கேள்வி

ரசிகர்கள் கேள்வி

கடைசியாக விளையாடிய 2 ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகளை உம்ரான் மாலிக் வீழ்த்தினார். ஆனால் அப்படி இருக்க முதலில் ஓய்வு என்று கூறிவிட்டு, இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் உம்ரான் மாலிக்கை நீக்கிவிட்டு, தற்போது நியூசிலாந்து தொடரில் சம்பந்தமே இல்லாமல் ஷர்துல் தாக்கூரை சேர்த்திருப்பது உம்ரான் மாலிக்கிற்கு செய்யும் துரோகம் இல்லையா? நன்றாக விளையாடும் வீரர்களை நீக்குவது சரியான முறையா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Story first published: Thursday, January 19, 2023, 19:12 [IST]
Other articles published on Jan 19, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+