Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடேங்கப்பா! சதம் அடிக்க இப்படி ஒரு ஷாட்டா! வேகப்பந்துவீச்சாளரை சிக்சருக்கு ஸ்விப் செய்த சூர்யகுமார்

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சூரியகுமார் யாதவ் 49 பந்துகளில் சதம் அடித்து அசத்தியிருக்கிறார். இதில் ஆறு சிக்ஸர்களும் 11 பவுண்டரிகளும் அடங்கும்.

இதன் மூலம் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 218 ரன்கள் என்ற இலக்கை எட்டி இருக்கிறது. சூரியகுமார் மைதானத்தில் எந்த பக்கம் இருந்தாலும் அதில் சாட் அடித்து பந்தை சிக்ஸருக்கு பறக்க விடுவதில் வல்லவர்.

unbelievable shot by suryakumar to register maiden ipl century- what a player

இந்த நிலையில் பலம் வாய்ந்த குஜராத் அணியை எதிர்கொண்ட சூரியகுமார் யாதவ், தனது வழக்கமான 360 டிகிரி ஷாட்டுகளை ஆடத் தொடங்கினார். இவர் ஆடியதை பார்த்து ஹர்திக் பாண்டியா என்ன செய்வது என்று தெரியாமலே திகைத்துப் போனார். ஒரு கட்டத்தில் ஆட்டம் முடியும் தருவாயில் வந்துவிட்டது. 20வது ஓவர் தொடக்கத்தில் சூரியகுமார் யாதம் 87 ரன்கள் அடித்திருந்தார். இதனால் சூர்யா தனது முதல் ஐபிஎல் சதத்தை பூர்த்தி செய்வாரா என்று எதிர்பார்ப்பு எழுந்தது.

கடைசி ஓவரின் இரண்டாவது பந்தில் டபுள்ஸ் ஓடிய சூர்யா நான்காவது பந்தில் சிக்ஸர் அடித்தார். இதன் மூலம் 95 ரன்கள் என்ற ஸ்கோரில் சூரியகுமார் வந்தார். இதனை அடுத்து ஐந்தாவது பந்தில் மீண்டும் டபுள்ஸ் சூர்யா ஓடினார். இதை அடுத்து சதம் அடிக்க மூன்று ரன்கள் தேவைப்பட்ட நிலையில், யாரும் எதிர் பார்க்காத வகையில் கடைசி பந்தில் ஸ்வீப் ஷாட் ஆடி சிக்ஸருக்கு பறக்க விட்டார்.

இதை பார்த்து அங்கு இருந்த எதிரணி வீரர்கள் எல்லாம் சூரிய குமாரை வந்து பாராட்டி கை கொடுத்து சென்றனர். வேகபந்துவீச்சாளரை ஸ்வீப் ஷாட் ஆடுவதெல்லாம் தனி திறமை வேண்டும். 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இதேபோன்று பும்ரா ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட் ஸ்வீப் ஷாட் ஆடி சிக்ஸர் அடித்தார். அதன் பிறகு அப்படி ஒரு ஷாட்டை சூரிய குமார் யாதவ் தான் இன்று ஆடி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார்.

Story first published: Friday, May 12, 2023, 22:33 [IST]
Other articles published on May 12, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+