Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி, ரோகித் ஆதிக்கம் முடிந்தது.. இனி இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் இவங்க தான்

மும்பை: சுனில் கவாஸ்கரில் தொடங்கி சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா வரை, இந்திய கிரிக்கெட் அணி ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய நட்சத்திரங்களை தொடர்ந்து உருவாக்கியுள்ளது. விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு பிந்தைய காலக்கட்டத்தை எதிர்கொள்ள இந்திய அணி தயாராகி வரும் நிலையில், இந்த மாற்றம் எளிதானதாகவே இருக்கும் என்று தென்னாப்பிரிக்க முன்னாள் ஆல்ரவுண்டர் லான்ஸ் குளூஸ்னர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து பேசிய லான்ஸ் குளூஸ்னர், "விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் கிரிக்கெட்டில் எவ்வளவு சிறந்த பங்களிப்பை அளித்திருந்தாலும், அவர்களுக்கான காலம் வரும்போது ஆட்டத்திலிருந்து விலகத்தான் வேண்டும். ஆனால் கிரிக்கெட்டின் அழகே அது தொடர்ந்து பயணிப்பதுதான். சில நேரங்களில் அது முந்தையதை விட வலுவடையும்" என்று தெரிவித்தார்.

Virat Rohit

சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளுடன் ஒப்பிட்டு பேசிய அவர், "நாங்கள் விளையாடிய காலத்தில் சச்சினின் சாதனைகளை யாராலும் முறியடிக்க முடியாது என்றே மக்கள் நினைத்தார்கள். ஆனால், இப்போது அந்த சாதனைகளுக்கே சவால் விடுக்கப்பட்டு வருகிறது. எனவே, வீரர்கள் வருவார்கள், போவார்கள். ஒரு நாட்டின் மகத்தான வீரர்கள் விலகும்போது வருத்தமாகத்தான் இருக்கும். ஆனால், திறமையான, புதிய தலைமுறை வீரர்கள் எப்போதும் வாய்ப்புக்காக வரிசையில் காத்திருக்கிறார்கள்" என்று கூறினார்.

IND vs NZ: 170 ரன்கள் கூட அடிக்க முடியாது என நினைத்தேன்..10 ஓவர் போட்டி போல் விளையாடினாங்க- EX வீரர்

IND vs NZ: 170 ரன்கள் கூட அடிக்க முடியாது என நினைத்தேன்..10 ஓவர் போட்டி போல் விளையாடினாங்க- EX வீரர்

இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால நம்பிக்கை குறித்துப் பேசிய குளூஸ்னர், சுப்மன் கில் இந்திய அணியை நீண்டகாலம் வழிநடத்த தகுதியானவர் என்றும், இளம் பேட்டிங் திறமையான வைபவ் சூர்யவன்ஷி எதிர்கால சூப்பர் ஸ்டாராக உருவெடுப்பார் என்றும் கணித்துள்ளார்.

சுப்மன் கில் குறித்து பேசிய அவர் "தனிப்பட்ட முறையில் எனக்கு இதில் எந்த சந்தேகமும் இல்லை. கேப்டன் பொறுப்பிற்கு அவரே சரியான நபர். அவர் பேட்டிங்கில் ஒரு சூப்பர் ஸ்டார். ஒரு பேட்டராகவும் கேப்டனாகவும் தன்னை எவ்வாறு தனித்தனியாகக் கையாள்வது என்பதில் அவர் கவனம் செலுத்த வேண்டும். சிறந்த கேப்டன்கள் அனைவரும் அதைத் துல்லியமாகச் செய்துள்ளார்கள். அவருக்கு உதவ பல மூத்த வீரர்களும், வாய்ப்புகளும் கிடைக்கும்" என்று குறிப்பிட்டார்.

IND vs NZ: இந்திய அணி பேட்டர்களை பாராட்டும் பலரும், பவுலர்களை ஏன் கண்டுகொள்வதில்லை- பிஸ்லா கேள்வி

Also Read

IND vs NZ: இந்திய அணி பேட்டர்களை பாராட்டும் பலரும், பவுலர்களை ஏன் கண்டுகொள்வதில்லை- பிஸ்லா கேள்வி

இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி பற்றி பேசிய அவர், "நட்சத்திரங்கள் வருவார்கள், போவார்கள். லெஜெண்டுகள் ஓய்வுபெறுவார்கள். நிலைமை இனி பழையபடி இருக்காது என்று மக்கள் நினைப்பார்கள். ஆனால், இந்திய கிரிக்கெட் வைபவ் சூர்யவன்ஷி போன்ற இளம் வீரர்களைத் தாண்டி வேறு எங்கும் தேட வேண்டியதில்லை. அவர்தான் கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார்" என்று புகழாரம் சூட்டினார்.

Story first published: Wednesday, October 28, 2026, 9:46 [IST]
Other articles published on Oct 28, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+