For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஷாருக்கானின் அந்த மனசு.. கொரோனா பாதித்த நிமிடங்கள்.. முதல் முறையாக வாய்த்திறந்த வருண் சக்கரவர்த்தி!

சென்னை: ஐபிஎல் தொடரின் போது முதன் முதலில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி, முக்கிய விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

Recommended Video

தமிழக வீரர் Shahrukh Khan நான் அடுத்த Pollard இல்லை எனத் திட்டவட்டம் | Oneindia Tamil

அணிகளின் பயோபபுளுக்குள் கொரோனா தொற்று நுழைந்ததால் இந்தாண்டு ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது. இதில் முதல் வீரராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் வருண் சக்ரவர்த்திக்குத்தான் முதலில் கொரோனா உறுதியானது.

2 வாரத்திற்கு மேலாக சிகிச்சைப்பெற்று வந்த வருண் சக்ரவர்த்தி மே 11ம் தேதி குணமடைந்து தற்போது சென்னை திரும்பிவிட்டார்.

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடரின் 2வது சுற்றுப் போட்டிகளுக்காக கொல்கத்தா அணி அகமதாபாத்தில் முகாமிட்டு விளையாடி வந்தது. அப்போது வருண் சக்ரவர்த்தி தந்து தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்துக்கு ஸ்கேன் எடுப்பதற்காக பயோபபுளைவிட்டு வெளியே சென்றிருந்தார். ஆனால் அதன்பிறகு எந்தவொரு குவாரண்டைனும் இன்றி அணிக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. இதன் விளைவாக அவருக்கு முதன் முதலில் கொரோனா செய்யப்பட்டது. இந்நிலையில் தனது கொரோனா அனுபவத்தை வருண் சக்கரவர்த்தி பகிர்ந்துள்ளார்.

கொரோனா உறுதி

கொரோனா உறுதி

இதுகுறித்து பேசியுள்ள அவர், மே 1ம் தேதி எனக்கு உடல் சோர்வும், லேசாக காய்ச்சல் இருப்பதையும் உணர்ந்தேன். இதனால் நான் சக வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபடவில்லை. அணி நிர்வாகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவித்தேன். அவர்கள் என்னைத் தனிமைப்படுத்தி RT-PCR சோதனைக்கு ஏற்பாடு செய்தார்கள். அதில் எனக்கு கொரோனா பாசிட்டீவ் என வந்தது. சக வீரர்களும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர்.

அணி நிர்வாகத்தின் அக்கறை

அணி நிர்வாகத்தின் அக்கறை

கொல்கத்தா அணி நிர்வாகம் எனக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்து பக்கலமாய் இருந்தது. ஐபிஎல் பாதியில் நிறுத்தப்பட்டு அனைத்து வீரர்களும் வீடுகளுக்கு சென்றுவிட்ட பின்னரும், என்னை கவனித்துக்கொள்வதற்காக ஒருவரை நியமித்திருந்தார்கள். பின்னர் 2 முறை செய்த பரிசோதனையில் கொரோனா நெகட்டீவ் என வந்த பிறகுதான் என்னை பத்திரமாக சென்னைக்கு அனுப்பினர். குறிப்பாக ஷாருக்கான் என்னைப்போன்ற அணியின் அனைத்து வீரர்களுக்கும் தனித்தனியாக தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அவர் வீரர்களுக்கு பெரும் நம்பிக்கை கொடுத்தார்.

வருணின் அக்கறை

வருணின் அக்கறை

தற்போது நான் குணமடைந்து வீட்டிற்கு வந்துவிட்டேன். ஆனால் இன்னும் நான் எந்த பயிற்சியையும் தொடங்கவில்லை. ஏனென்றால் எனக்கு உடல் சோர்வாக உள்ளது. வாசனைகளையும், ருசிகளையும் உணர முடிவதில்லை. ஆனால் விரைவில் பயிற்சியை தொடங்குவேன். என்னப்போன்ற மற்ற வீரர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்று தான். கொரோனாவில் இருந்து குணமடைந்தாலும், கண்டிப்பாக 2 வாரங்கள் ஓய்வு எடுங்கள் மாஸ்க் அணிந்தே எங்கேயும் சொல்லுங்கள் என வருண் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.

Story first published: Saturday, May 22, 2021, 15:14 [IST]
Other articles published on May 22, 2021
English summary
Varun Chakravarthy Shares his Experience of Covid-19 during IPL 2021
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+