Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

DK "அதை" மட்டும் தமிழ்-ல தான் சொல்லுவாரு.. எதிரணி வீரர்களை வச்சு செய்வோம் - வெங்கடேஷ் ஐயர்

ஷார்ஜா: கொல்கத்தா அணியில் மூன்று தமிழக வீரர்கள் விளையாடி வரும் நிலையில், எப்போதும் தமிழில் உரையாடுவது ஏன்? என்பது குறித்து வெங்கடேஷ் ஐயர் பேசியுள்ளார்.

ஐபிஎல் 2021 தொடரில், இன்று (அக்.7) நடைபெற்று வரும் டபுள் ஹெட்டர்ஸ் இரண்டாவது போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பவுலிங்கை தேர்வு செய்ய, கொல்கத்தா தற்போது பேட்டிங் செய்து வருகிறது.

 கண்டிப்பான ஜெயிக்கணும்

கண்டிப்பான ஜெயிக்கணும்

ஷார்ஜாவில் நடைபெற்று வரும் இப்போட்டியில், கொல்கத்தா அணி, மிக மிக நிதானமாக பேட்டிங் செய்து வருகிறது. பிளே ஆஃப் முன்னேற வேண்டுமெனில், இப்போட்டியில் கொல்கத்தா கண்டிப்பாக வெற்றியை உறுதி செய்ய வேண்டும். ஏனெனில், 13 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தாவும், மும்பையும் 12 புள்ளிகள் பெற்றுள்ளன. ஸோ, இன்று கடைசி போட்டியில் விளையாடும் கொல்கத்தா, கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும். ஒருவேளை போட்டியை இழந்துவிட்டால், நாளை நடைபெறும் போட்டியில், மும்பை ஜெயிக்கக் கூடாது என்று மந்திரம் போட வேண்டியிருக்கும்.

 வாழ்வா? சாவா?

வாழ்வா? சாவா?

இன்று ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியை வென்றுவிட்டால், 90 சதவிகிதம் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிடலாம். ஏனெனில், மும்பையை விட கொல்கத்தா நல்ல ரன்ரேட் வைத்திருக்கிறது. ஒருவேளை நாளை மும்பை ஜெயித்தாலும் கூட, இன்று கொல்கத்தா வெல்லும் பட்சத்தில் ரன் ரேட் அடிப்படையில், கொல்கத்தா பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்புகளே அதிகம். ஆகையால், இன்றைய போட்டி கொல்கத்தாவின் வாழ்வா? சாவா? ஆட்டம் என்பதில் சந்தேகமில்லை.

 தமிழில் உரையாடல்

தமிழில் உரையாடல்

கொல்கத்தா அணியில் மிக முக்கிய வீரராக உருவெடுத்திருப்பவர் தமிழக வீரர் வெங்கடேஷ் ஐயர். இவர் மத்திய பிரதேச அணிக்காக விளையாடினாலும், பூர்விகம் தமிழ் என்பது அனைவருக்கும் தெரியும். கொல்கத்தா அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி, இளம் வீரர் வெங்கடேஷ் ஐயர் ஆகிய மூவரும் தமிழர்கள் என்பதால், போட்டியின் போது அதிகம் தமிழில் பேசுவதை நாம் கேட்டிருப்போம். குறிப்பாக வருண் சக்கரவர்த்தி, வெங்கடேஷ் பந்து வீச வரும் போது, தினேஷ் கார்த்திக் தமிழில் பேசுவது எப்போதும் சமூக தளங்களில் வைரல் ஆகும்.

 உதவியா இருக்கும்

உதவியா இருக்கும்

இந்நிலையில், இப்போட்டிக்கு முன்பு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழுக்கு பேட்டியளித்த வெங்கடேஷ் ஐயர், ஆட்டத்தின் போது தமிழில் பேசுவது குறித்து பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "நான், வருண் சக்கரவர்த்தி, தினேஷ் கார்த்திக் போட்டியின் போது தமிழில் தான் பேசுவோம். குறிப்பாக, நாங்கள் பவுலிங் செய்யும் போது, தினேஷ் கார்த்திக் தமிழில் மட்டுமே பேசுவார். ஏனெனில், ஐபிஎல் விளையாடும் அனைத்து இந்திய வீரர்களுக்கும் ஹிந்தி தெரியும். அதனால், விராட் கோலி, தோனி, ரோஹித் மாதிரியான முக்கியமான பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்யும் போது, ஹிந்தியில் பேசினால் நாம் எந்த வியூகமும் வகுக்க முடியாது. ஆங்கிலத்திலும் பேச முடியாது. ஆனால், நம்மிடம் தமிழ் என்ற நமது மொழி இருக்கிறது. உள்ளூர் மொழி பேசும் Luxury நம்மிடம் உள்ளது. இதனால், தினேஷ் தமிழில் பேச, எங்களுக்கும் அது உதவியாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, October 7, 2021, 20:43 [IST]
Other articles published on Oct 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+