For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரோகித் சர்மாவ விட கோலிதான் அதுல பெஸ்ட்... பிராட் ஹாக் உறுதி

மெல்போர்ன் : ரன் சேஸிங் ஆட்டங்களின்போது ரோகித் சர்மாவை விட கேப்டன் விராட் கோலியே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்றும் அதனால் அவரே சிறந்த பேட்ஸ்மேன் என்றும் முன்னாள் ஆஸ்திரேலிய ஸ்பின்னர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

Recommended Video

IPL 2020 could be hosted outside the India

தன்னுடைய யூடியூப் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய ஹாக், ரோகித் சர்மா, விராட் கோலி இருவரில் யார் சிறந்த ஆட்டக்காரர் என்ற கேள்விக்கு பதிலளித்தார்.

மேலும் இருவருக்கும் பிரத்யேக திறன்கள் அதிகமாக இருப்பதாகவும், இருவரையும் கம்பேர் செய்ய முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா

துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் துணை கேப்டன் ரோகித் சர்மா இருவரும் இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டங்களை பல்வேறு தருணங்களில் பரிசளித்துள்ளனர். தனியாகவே விளையாடி ஆட்டத்தை வெற்றிப்பாதைக்கு அழைத்தும் சென்றுள்ளனர். இவர்கள் இருவரின் ஆட்டங்கள் பல்வேறு நேரங்களில் கம்பேர் செய்து பார்க்கப்படுவதுண்டு.

பிராட் ஹோக் உறுதி

பிராட் ஹோக் உறுதி

இதனிடையே, ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கிடையில் கோலிதான் மிகவும் சிறந்த பேட்ஸ்மேன் என்று முன்னாள் ஆஸ்திரேலிய ஸ்பின்னர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். தன்னுடைய யூடியூப் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஹாக், சேஸிங்கில் இந்தியா ஆடும்போது, தன்னுடைய நிலையான ஆட்டத்தை விராட் கோலி வெளிப்படுத்துவதாக கூறியுள்ளார்.

தனித்தனி திறமைகள் உள்ளது

தனித்தனி திறமைகள் உள்ளது

ஆனால் இருவரையும் ஒப்பிடுவது சரியாக இருக்காது என்றும், இருவருக்கும் தனித்தனியாக பிரத்யேக திறமைகள் அதிகமாக உள்ளதாகவும் ஹாக் மேலும் கூறியுள்ளார். ரோகித் சர்மா பௌலர்களின் பந்துகளை மிகவும் வலிமையாக எதிர்கொள்வதாகவும், விராட் கோலி, ஆட்டத்தின் இறுதியில் தான் இருக்கிறேன் என்ற நம்பிக்கையை அணிக்கு அளிப்பதாகவும் ஹாக் தெரிவித்துள்ளார்.

குமார சங்ககாரா புகழ்ச்சி

குமார சங்ககாரா புகழ்ச்சி

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தங்களின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் சர்வதேச அளவில் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளனர். சமீபத்தில் கிரிக்கெட் கனெக்டட் நிகழ்ச்சிக்காக பேசிய முன்னாள் இலங்கை கேப்டன் குமார சங்ககாராவும், நவீன கிரிக்கெட் உலகின் சிறப்பான வீரர்கள் என ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை குறிப்பிட்டு பாராட்டியிருந்தார்.

Story first published: Friday, June 5, 2020, 9:22 [IST]
Other articles published on Jun 5, 2020
English summary
Brad Hogg joined the debate of who is better between Virat and Rohit
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+