நான் ஆல் லைடம் சிறந்த கிரிக்கெட் வீரரா? அப்போ அவங்க ரெண்டு பேரையும் என்ன சொல்றது? விராட் கோலி பேட்டி
சிட்னி : சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை விளையாட்டு சிறந்த வீரர் யார் என்ற கேள்விக்கு விராட் கோலி சூப்பர் பதில் ஒன்றை அழைத்துள்ளார்.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் பெரிய நட்சத்திர வீரர்கள் தடுமாறி வருகின்றனர்.
கடந்த முறை அதிக ரன்கள் விளாசிய வார்னர்,ஜாஸ் பட்லர் ஆகியோர் இம்முறை சொதப்பி வருகின்றார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன் பல்வேறு விமர்சனங்களை சந்தித்த விராட் கோலி முறை தனது பேட் மூலம் பதில் சொல்லி வருகிறார் .

2 அரைசதம்
நடப்பு டி20 உலக கோப்பையில் விராட் கோலி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் அரைசதம் அடித்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்து இருக்கிறார். சொல்லப்போனால் நடப்பு டி20 உலக கோப்பை போட்டியில் விராட் கோலி இன்னும் ஒரு முறை கூட ஆட்டம் இழக்கவில்லை. தோல்வி அடைய வேண்டிய போட்டியில் விராட் கோலி சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வெற்றியை பெற்று கொடுத்தார்.

ஆல் டைம் சிறந்த வீரர்?
பாகிஸ்தானுக்கு எதிராக அவர் அடித்த அரைசதத்தை பார்த்து ரசிகர்கள் Greatest of all time எனப்படும் GOAT பட்டத்தை கொடுத்தனர். அதாவது, விராட் கோலியை காலத்தால் எப்போதும் சிறந்த வீரர் என்ற ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். இது குறித்து கூகுளிலும் ரசிகர்கள் நிறைய தேடி இருக்கிறார்கள்.

நான் கிடையாது
ரசிகர்கள் உங்களை ஆல் டைம் சிறந்த கிரிக்கெட் வீரர் என்று அழைக்கிறார்களே அது பற்றி உங்கள் கருத்து என என்று கோலியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த விராட் கோலி ,நான் நிச்சயமாக என்னை ஆல் டைம் சிறந்த கிரிக்கெட் வீரர் என்று அழைக்க மாட்டேன். என்னை பொறுத்தவரை எப்போதுமே இரண்டு கிரிக்கெட் வீரர்கள் தான் அந்த அந்தஸ்தை பெறுவார்கள் .

இவ்விருவர் தான்
அதில் ஒன்று இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் மற்றொருவர் வெஸ்ட் இண்டீஸ் வீரர் விவயன் ரிச்சர்ட்ஸ் என்று விராட் கோலி பதில் அளித்துள்ளார். விராட் கோலியின் இந்த பதில் ரசிகர்களின் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இவ்வளவு திறமைகள் வைத்திருந்தும் விராட் கோலி சீனியர்களுக்கு மரியாதை கொடுத்து தலைகனம் இல்லாமல் இருக்கிறார் என்று ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.


Click it and Unblock the Notifications