Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே ஒரு போட்டோ..! ஒட்டு மொத்தமாக மாட்டிக் கொண்ட கோலி..!! கிழிகிழியென கிழிக்கும் ரசிகர்கள்

Recommended Video

Rohit vs Kohli : செல்பியால் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கோலி- வீடியோ

மும்பை: ரோகித்துடன் சண்டை இல்லை என்று கோலி கூறினாலும், டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள போட்டோவால் மாட்டிக் கொண்டிருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கு கிளம்புவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. அந்த அளவுக்கு அணியையும், மற்றவர்களையும் திரும்ப, திரும்ப பேச வைக்கிறது கோலி, ரோகித் முட்டல், மோதல் விவகாரம்.

ஒரு கட்டத்தில் மும்பையில் கோலியும், ரவிசாஸ்திரியும் செய்தியாளர்கள் சந்திப்பை புறக்கணித்தனர். அதற்கு காரணம் ரோகித் சர்மாவுடன் இருந்து கருத்து வேறுபாடு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினால் என்ன செய்வது என்பது தான். ஆனால் வேறு வழியின்றி செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தப் பட்டது.

யாரோ குழப்புகிறார்கள்

யாரோ குழப்புகிறார்கள்

அதில், ரோகித் விவகாரம் குறித்து பல பதில்களை அளித்தார். அவர் நான் அவரிடம் எப்படி நடந்து கொள்கிறேன் என்பதை யாரோ குழப்பி விடுகிறார்கள். அதில் யாருக்கு பயன் என்று எனக்கு தெரியவில்லை.

சிறந்த வீரர்

சிறந்த வீரர்

ரோகித்துக்கும், எனக்கும் நல்ல உறவு நீடிக்கிறது. பல தருணங்களில் நான் எப்பொழுதும் ரோகித்தை பாராட்டி வந்துள்ளேன். ஏனெனில் அவர் சிறந்த வீரர் என்று நான் நம்புகிறேன்.

எனக்கு கோபம் வரும்

எனக்கு கோபம் வரும்

மேலும் எனக்கு கோபம் வந்தால், முகத்திலும் என்னுடைய நடவடிக்கையிலும் அதை நீங்கள் எளிமையாக பார்க்க முடியும். எனவே இந்த பிரச்சினையில் எந்த ஒரு உண்மையும் இல்லை என்றார்.

டுவிட்டர் போட்டோ

இந்நிலையில் மியாமி நோக்கி இந்திய அணி புறப்படும் முன் இந்திய வீரர்களுடன் கோலி செல்பி எடுத்து அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அந்த செல்பி தான் இப்போது எக்கச்சக்கமாக கோலியை மாட்ட வைத்திருக்கிறது.

ரோகித் இல்லை

ரோகித் இல்லை

ஏன் என்றால், அந்த செல்பியில் ரோகித் சர்மா இடம்பெறவில்லை. ராகுல், சுந்தர், மனிஷ் பாண்டே , கலீல் அஹ்மது மற்றும் கருணால் பாண்டியா ஆகியோர் இருந்தனர். அதனை கண்ட ரசிகர்கள் உங்களுக்குள் பிரச்சனை இல்லை எனில் அவரை ஏன் புகைப்படம் எடுக்க வில்லை என்று மீண்டும் புகைச்சலை தொடங்கி உள்ளனர்.

ரசிகர்கள் பதிவு

ரசிகர்கள் பதிவு

எனவே, பிரச்சனை இருப்பது உண்மைதான் என்று இதன் வழியாக தெரிந்து விட்டது என்று அந்த புகைப்படத்துக்கு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஆக மொத்தத்தில் வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்தாலும் இந்த விவகாரம் ஓயாது என்று போல தெரிகிறது.

Story first published: Tuesday, July 30, 2019, 12:24 [IST]
Other articles published on Jul 30, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+