தோனி, சச்சின், ரோகித்தை அலேக்காக காலி செய்த கோலி..!! யாரும் செய்யாத சாதனை இதுதான்..!!
டெல்லி: சமூக ஊடகங்களில் அதிக ரசிகர்கள் பின் தொடரும் கிரிக்கெட் வீரர்களில் சச்சின், தோனியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்திருக்கிறார் விராட் கோலி.
சோசியல் மீடியாவில் அதிகம் பின் தொடரப்படும் டாப் 10 கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதாவது, சமூக ஊடகங்களான ட்விட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகியவற்றில் அதிக ரசிகர்கள் பின்தொடரும் கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. அதில் கோலிதான் முதலிடத்தில் உள்ளார்.
அதிகமான ரசிகர்களைக் கொண்டிருக்கும் தோனிக்கு பின்தொடர்பவர்கள் அதிகம் இல்லை. ஆனால், கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் கழிந்தும், சச்சின் கோலிக்கு அடுத்து மிகுந்த ஆக்டிவாக இருக்கிறார். 10 ஆண்டுகளில் சர்வதேச போட்டிகளில் 20 ஆயிரம் ரன்கள் அடித்த வீரராக இந்திய அணியின் கோலி உள்ளார்.

3 கோடி பேர் ஆதரவு
அதனால், கோலிக்கு ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய மூன்றிலும் ஒவ்வொன்றிலும் 3 கோடிக்கும் மேல் பாலோயர்ஸ் இருக்கின்றனர். மாஸ்டர் பிளாஸ்டர் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் 2வது இடத்தில் உள்ளார். அவருக்கு ட்விட்டரில் 3.1 கோடி ஆதரவாளர்களும், பேஸ் புக்கில் 2.8 கோடி ஆதரவாளர்களும், இன்ஸ்டாகிராமில் 1.65 கோடி ஆதரவாளர்களும் உள்ளனர்.

தோனிக்கு 3ம் இடம்
அதிக ரசிகர்களை கொண்டிருந்தாலும் தோனிக்கு சமூக ஊடகங்களில் அதிகமான பாலோயர்ஸ் இல்லை. காரணம் அவர், ரசிகர்களுடன் அளவளாவது இல்லை. இன்ஸ்டாகிராமில் 1.54 கோடி பாலோயர்சும், ட்விட்டரில் 77 லட்சம் பேரும், பேஸ்புக்கில் 2.50 கோடி பேரும் ஆதரவாளர்களாக இருக்கின்றனர்.

ரோகித் 4ம் இடம்
ரோகித் சர்மா 4வது இடத்தில் உள்ளார். அவருக்கு இன்ஸ்டாகிராமில் 1.50 கோடி பேரும், ட்விட்டரில் 1.47 கோடி பேரும், பேஸ்புக்கில் 1.10 கோடி பேரும் ஆதரவாக இருக்கின்றனர். சுரேஷ் ரெய்னாவுக்கு ட்விட்டரில் 1.67 கோடி ரசிகர்களும், இன்ஸ்டாகிராமில் 90ல ட்சம் ரசிகர்களும், பேஸ்புக்கில் 31 லட்சம் ரசிகர்களும் இருக்கின்றனர். இவருக்கு கிடைத்திருப்பது 5வது இடம்.

கலக்கல் யுவராஜ் சிங்
6வது இடத்தில் இருக்கும் யுவராஜ் சிங்கிற்கு பேஸ்புக்கில் 1.40 கோடி ரசிகர்களும், ட்விட்டரில் 47 லட்சம் ரசிகர்களும், இன்ஸ்டாகிராமில் 75 லட்சம் ரசிகர்களும் உள்ளனர். டர்பனேட்டர் ஹர்பஜன் சிங் 7வது இடத்தில் உள்ளார். அவருக்கு ஆதரவாக 1.10 கோடி ரசிகர்களும், இன்ஸ்டாகிராமில் 36 லட்சம் ரசிகர்களும், பேஸ்புக்கில் 66 லட்சம் ரசிகர்களும் ஆதரவாக உள்ளனர்.

360 டிகிரி வீரர்
அடுத்ததாக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஏ.பி. டிவில்லியர்ஸ் உள்ளார். 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று வர்ணிக்கப்படும் டிவில்லியர்ஸுக்கு இன்ஸ்டாகிராமில் 85 லட்சம் பேரும், ட்விட்டரில் 67 லட்சம் பேரும், பேஸ்புக்கில் 36 லட்சம் பேரும் ஆதரவாக இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications