Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்லை விடு.. பாகிஸ்தானுக்கு நீ வேணும்.. மறந்துடாத - அமீருக்கு அக்ரம் "சூசக" அட்வைஸ்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அணியில் முகமது அமீருக்கு நிச்சயம் இடமளிக்க வேண்டும் என்கிறார் வாசிம் அக்ரம். அதற்கு அவர் சொல்லும் காரணம் மிக முக்கியமானது.

Recommended Video

Pakistan T20 Squadல் Mohammed Amir வேணும் : Wasim Akram கருத்து

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீர் கடந்த 2020ம் ஆண்டு, டிசம்பர் மாதம் யாரும் எதிர்பார்க்காத வகையில் தனது ஓய்வை அறிவித்தார். 29 வயதே ஆகும் அமீரின் ஓய்வு ரசிகர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

முகமது அமீர் தற்போது குடும்பத்தினருடன் தற்போது இங்கிலாந்தில் தங்கியுள்ளார். அவரது மனைவி இங்கிலாந்தை சேர்ந்தவர் என்பதால், தான் இங்கிலாந்து குடியுரிமை பெறவுள்ளதாகவும், அடுத்த 6 அல்லது 7 ஆண்டுகளுக்கு கிரிக்கெட் விளையாட முடியும் என்பதால், இங்கிலாந்து உள்நாட்டு அணியில் கிரிக்கெட் விளையாட விரும்புவதாகவும் அமீர் தெரிவித்தார்.

இங்கிலாந்து குடியுரிமை

இங்கிலாந்து குடியுரிமை

இந்த சூழலில், அவர் இங்கிலாந்து குடியுரிமையுடன் ஐபிஎல் தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடரின் 2வது சீசன் முதல் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்படுவதில்லை. இதுவரை பாகிஸ்தானை சேர்ந்த அசார் முஹ்மூத் மட்டுமே ஐபிஎல்-ல் பங்கேற்று பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு விளையாடியுள்ளார். அப்போதும் கூட அவர் இங்கிலாந்து குடியுரிமையுடன் தான் பங்கேற்றார்.

அமீர் அணிக்கு தேவை

அமீர் அணிக்கு தேவை

இந்த நிலையில், பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், பாக்., கிரிக்கெட் கமிட்டியின் உறுப்பினராக உள்ள வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம், அணியில் இருந்து அமீர் புறக்கணிக்கப்படுவது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர், "நான் உண்மையில் ரொம்பவே ஆச்சரியப்படுகிறேன். ஏனென்றால் அமீர் மிகவும் அனுபவம் வாய்ந்த பவுலர். குறிப்பாக, டி20 கிரிக்கெட்டில் உலகின் மிகச் சிறந்த பவுலராக விளங்குகிறார். அவர் பாகிஸ்தானின் உலக டி20 அணியில் இருக்க வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் நான் நினைக்கிறேன்.

வாய்ப்பு கொடுக்கணும்

வாய்ப்பு கொடுக்கணும்

சமீப காலமாக அமீர் எடுக்கும் தனிப்பட்ட முடிவுகள் குறித்து அதிகம் பேசப்படுகிறது, விவாதிக்கப்படுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது அவரது தனிப்பட்ட முடிவு. அதில் யாரும் தலையிட உரிமை கிடையாது. மற்ற வீரர்களும் தான் ஓய்வு பெறுகிறார்கள். ஏன் அவர்களைப் பற்றி பேசாமல், இவரை மட்டும் பற்றியே பேசுகிறீர்கள்? டெஸ்ட் கிரிக்கெட் தவிர்த்து, மற்ற ஃபார்மட் கிரிக்கெட் போட்டிகளில் அவர் விளையாட விருப்பம் தெரிவித்தால், அவருக்கு நிச்சயம் வாய்ப்பு வழங்க வேண்டும்.

தோல்விக்கு அஞ்சாத

தோல்விக்கு அஞ்சாத

உலகக் கோப்பை போன்ற மிகப்பெரிய தொடர்களில் அனுபவம் வாய்ந்த பவுலர்கள் வேண்டும். அப்போது தான் அவர்கள், இளம் வீரர்களுக்கு ஆலோசனை கொடுக்க முடியும். அந்த வகையில் அமீர் பாகிஸ்தான் டி20 அணிக்கு தேவை. டி20 அணியில் நாம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர்களைக் கொண்டிருக்க வேண்டும், தோல்விக்கு அஞ்சாமல் விளையாடக்கூடியவர்கள் இருந்தால் மட்டுமே நாம் சிறப்பாக செயல்பட முடியும்" என்றார்.

Story first published: Monday, May 24, 2021, 16:01 [IST]
Other articles published on May 24, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+