Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL - தோனிக்கு ஆகாயத்தில் கிடைத்த மரியாதை.. விமானி வைத்த கோரிக்கை.. இதுலாம் வேற லெவல் வீடியோ

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனிக்கு செல்லும் இடமெல்லாம் பாராட்டுக்களும் சிறப்புகளும் வந்து கொண்டிருக்கிறது. தோனி செல்லும் இடத்திற்கெல்லாம் அவருக்கு என்ன ரசிகர்கள் இருப்பார்கள்.

இந்த நிலையில் முதல் முறையாக ஆகாயத்தில் தோனிக்கு ஒரு பாராட்டு நிகழ்வு நடைபெற்றிருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொள்வதற்காக சிஎஸ்கே அணி கடந்த சில நாட்களுக்கு முன் விமானத்தில் மும்பை சென்றது. அப்போது சிஎஸ்கே வீரர்கள் மக்களோடு மக்களாக அமர்ந்து தங்களது பயணத்தை மேற்கொண்டனர்.

Watch the video of Pilot wishes Dhoni and ask him to stay as csk captain

இந்தப் பயணத்தின் போது தோனிக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருந்தது. விமானத்தின் பைலட் கேபினை விட்டு வெளியே வந்த விமானி, தோனிக்கு பாராட்டு தெரிவித்தார். நான்கு முறை சாம்பியனும் உலக கோப்பையை வென்று தந்த தோனியும் சிஎஸ்கே அணியும் நம்முடன் பயணிக்கிறார்கள். அவர்களுக்கு என் குழு சார்பாக மனமார்ந்த வரவேற்பையும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Watch the video of Pilot wishes Dhoni and ask him to stay as csk captain

நான் உங்களுடைய மிகப் பெரிய ரசிகன். எனக்கு ஒரே ஒரு கோரிக்கை தான். நீங்கள் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தொடர்ந்து செயல்பட வேண்டும் என விமானி பேசினார். தற்போது இதன் வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்ட தோனி தனது கடைசி ஐபிஎல் தொடரில் விளையாடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச்சாளர்கள் நோபால் வீசினால் நான் சென்று விடுவேன் என தோனி பேசினார். இதற்கு தான் தற்போது விமானி, சிஎஸ்கே கேப்டனாக தொடருங்கள் என கோரிக்கை வைத்திருக்கிறார்.

Story first published: Saturday, April 8, 2023, 18:51 [IST]
Other articles published on Apr 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+